அரச வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சரவை பேச்சாளர்

26 Nov, 2024 | 06:02 PM
image

அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை மீண்டும் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், அரச வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

அரசாங்கத்துக்குச் சொந்தமான  வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு உரிய நபர்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 

அரச வாகனங்களை மீண்டும் ஒப்படைத்தவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பெயர்கள் எம்மிடம் உள்ளன.

இவை அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்கள் ஆகும். எனவே அரச வாகனங்களைச் சட்டவிரோதமாக வைத்திருப்பவர்கள் அவற்றை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த செயற்திட்டம் ஆரம்பமாகி ஒரு வார காலமே ஆகின்றது. எனவே கால அவகாசம் முடிவடைந்ததும் அரச வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08