2024 / 2025ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வலுவான செயற்றிறனை எடுத்துக்காட்டிய எயிற்கின் ஸ்பென்ஸ்

26 Nov, 2024 | 06:06 PM
image

பிராந்திய ரீதியாக பரந்த செயற்பாடுகளைக் கொண்டுள்ள மாபெரும் கூட்டு நிறுவனமாகிய எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி., 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் ரூ.8.9 பில்லியன் என்ற EBITDA சம்பாத்தியத்தை (இதில் வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனை ஆதாயங்கள் மற்றும் இழப்புகள் உள்ளடங்கவில்லை) பெற்றது. இது 10.4 வீத வளர்ச்சியாகும். 

EBITDA  இல் பங்குரிமைக் கணக்கு முதலீட்டாளர்களின் சம்பாத்தியம் உள்ளடங்கும் ஆனால் வட்டிச் செலவுகள், வரி, தேய்மானம் மற்றும் பெறுமதிக் குறைப்பு உள்ளடங்க மாட்டா. எயிற்கின் ஸ்பென்ஸ் குழுமத்தின் செயற்பாடுகளில் இருந்தான இலாபம் (வெளிநாட்டு நாணயம் நீங்கலாக) 38.7மூ வளர்ச்சியுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றது. அதாவது, ரூ.2.5 பில்லியன் என்பதிலிருந்து ரூ.3.5 பில்லியனாக அதிகரித்தது. 

குழுமத்தின் கடல்சார் மற்றும் கப்பற் சரக்கு கையாளுதல் துறை 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ.2.3 பில்லியனை பெற்றது. 

இத் துறையின் செயற்பாடுகள் வியாபாரத் தொகைகளின் வீழ்ச்சியினாலும் நாணயப் பரிவர்த்தனை வீத ஏற்றத்தாழ்வுகளினாலும் பாதிக்கப்பட்டிருந்தது.  

குழுமத்தின் மூலோபாய முதலீட்டுத் துறை வரிக்கு முந்திய இலாபமாக ரூ.728 மில்லியனை பெற்றது. இது 100மூக்கு மேற்பட்ட வளர்ச்சியாகும். 

நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட இக் குறிப்பிடத்தக்க இலாப வளர்ச்சிக்கு, நீரியல் மின்சார கம்பனிகளின் முன்னேற்றகரமான பெறுபேறுகள், குழுமத்திலுள்ள புதுப்பிக்கத்தக்க சக்திவளத் துறையிலுள்ள ஏனைய கம்பனிகள் முன்பு தாமதிக்கப்பட்டிருந்த வட்டியைப் பெற்றுக்கொண்டமை என்பனவே பிரதான காரணங்களாகும். 

குழுமத்தின் சுற்றுலாத்துறைச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டின. 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் இழப்புகள் 36.9மூ குறைவடைந்தன. 

ஹொட்டேல்களில் தங்குவோரின் வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு, அறைக் கட்டணங்களின் சராசரி அதிகரிப்பு ஆகியவற்றினால் ஹொட்டேல் துறை நன்மை அடைந்தது. இதனால், முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு ஹொட்டேல்களுக்குச் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன.

எனினும், சேரிட முகாமைத்துவத் துறையானது இக் காலப்பகுதியில் பல சவால்களுக்கு முகஙகொடுக்க நேர்ந்தது. 18மூ ஏயுவு வரி மீண்டும் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட பாரிய பொருளாதாரக் காரணிகள் இத் துறையின் பெறுபேறுகளைக் கடுமையாகப் பாதித்தது. 

சுற்றுலா செயற்படுத்துநர்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்ட கட்டணங்களுடன் இந்த ஏயுவு வரிக்கான செலவைச் சேர்க்க முடியவில்லை. 

அது மாத்திரமன்றி, செங்கடல் பிரதேசத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான கப்பற் சேவைகள் மற்றும் விமான சேவைகளை மோசமாகப் பாதித்ததாலும் இத் துறையின் செயற்பாடுகள் மேலும் வீழ்ச்சியடைந்தன.

குழுமத்தின் சேவைகள் துறையில் ரூ.52.1 மில்லியன் இழப்பு பதிவு செய்யப்பட்டது. கொழும்பில் மிகவுயரமான பல கட்டடங்களின் நிர்மாண வேலைகள் துரிதமாகப் பூர்த்தி செய்யப்பட்டதன் நிமித்தம் உயர்த்திகளைப் பெறுவதற்கு ஏற்பட்ட மேலதிக செலவுகளை இதற்குப் பிரதான காரணமாகும். 

அத்துடன், பண அனுப்பீடுகளுக்கான குறைந்த பரிவர்த்தனை வீதத்தினால் பணப் பரிமாற்ற வியாபாரம் பாதிக்கப்பட்டமையும் இத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். 

இக் காலப்பகுதியில் குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் (வெளிநாட்டு நாணயம் நீங்கலாக) ரூ.1.5  பில்லியனாக அதிகரித்தது. முன்னைய ஆண்டில் ஏற்பட்ட ரூ.1.2  பில்லியன் இழப்பைக் கருத்திற் கொள்ளும்போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

பேண்தகு தன்மை

குழுமம் தொடர்ந்தும் சுற்றாடலியல், சமூக மற்றும் பொருளாதாரப் பேண்தகு தன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது. 

நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் ரொஹான் பெர்னாண்டோவின் தலைமையிலும் குழுவின் மேற்பார்வைச் சபை மற்றும் பிரதான சபைக்கு அறிக்கையிடும் கடப்பாடுடனும் குழுமத்தினால் அமைக்கப்பட்டுள்ள பேண்தகு தன்மை மன்றத்தில் துறைசார் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் ஊ-ளுரவைந அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

 இந்த மன்றம் பேண்தகு தன்மை தொடர்புடைய இலக்குகள், முPஐளஇ மற்றும் தீர்மானங்களை மேற்பார்வை செய்கின்றது. முடிவடைந்த காலாண்டில், இந்த மன்றம் வெளியிடத் துறைசார் நிபுணர்களின் உதவியுடன் ஐகுசுளு ளு1 மற்றும் ளு2 தரநிலைகள் பற்றிய உணர்திறனைப் பெற்றுக்கொண்டது.

 குழுமத்தின் பேரிடர் ஆபத்துக் குறைப்பு மூலோபாயத்திற்குள், குழுமம் அதன் முதல் தடவையாக பூமியதிர்ச்சி, இரவுநேர தீவிபத்து தொடர்பான ஒத்திகைப் பயிற்சிகளை எயிற்கின் ஸ்பென்ஸ் டவர்ஸில் நடத்தியது.   

நிதிசாராத செயற்பாட்டுக் குறிகாட்டிகளைக் கண்காணிப்பதற்கு, குழுமம் அதன் தரவு முகாமைத்துவத் தளத்தில் காட்சி அமைப்புகளை இற்றைப்படுத்தியது. குழுமத்தின் நிறுவன அமைப்பிற்குள்ளான மொத்தச் சக்தி நுகர்வு நடப்பு நிதியாண்டின் 2ஆவது காலாண்டில் 376இ507 புது ஆகவிருந்தது. 

2023-2024 நிதியாண்டின் 2ஆவது காலாண்டு நுகர்வுடன் ஒப்பிடுகையில் இது 16மூ அதிகரிப்பாகும். சுற்றுலாத்துறை மற்றும் மூலோபாய முதலீட்டுத் துறையில் இடம்பெற்ற அதிகரித்த செயற்பாடுகளே இதற்குக் காரணமாகும். 

இதனுடன் ஒப்பிடுகையில், நீர்ப் பாவனை 2023-2024 நிதியாண்டின் 2ஆவது காலாண்டில் இருந்ததைவிட 34மூ குறைந்து 854இ243அ3 ஆக காணப்பட்டது. 

குழுமத்தின் பாதைகளை நிகர பூஜ்ஜிய மற்றும் நிகர நேர்மறைத் தாக்கங்களுடன் இணைப்பதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. 

மேலும், நாட்டின் கூட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் எயிற்கின் ஸ்பென்ஸ், வியாபார நிறுவனங்களுக்கிடையே காலநிலை நடவடிக்கை பற்றிய உரையாடல்களை ஊக்குவிப்பதற்காக, ஐ.நா. குளோபல் கொம்பக்டின் காலநிலை அவசர செயலணிக் கூட்டங்களை எயிற்கின் ஸ்பென்ஸ் டவர்ஸில் நடத்துவதற்குத் தொடர்ந்து இடமளிக்கின்றது. 

ஸ்பென்ஸ் லுமினரி (Spence Luminary)

வழிகாட்டுதல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்காக, குழுமத்தின் ர்சு பிரிவு “ஸ்பென்ஸ் லுமினரி” பதாகையின் கீழ் வழிகாட்டுநர்களின் தொகுதியொன்றை ஏற்படுத்தியுள்ளது. 

சக ஊழியர்கள் தமது தொழில் வாழ்க்கையைச் சிறப்பாக முன்னெடுக்கவும் தமது முழுத் திறன்களையும் வெளிப்படுத்தவும் இந்த வழிகாட்டுநர்கள் வழிகாட்டுவார்கள்.

 50 சிரேஷ்ட அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்ஃபயிற்சியளித்தல் திறன்களைப் புகட்டுவதற்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டமொன்றுடன் இந்த முன்முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. 

அதன் பின்னர், வழிகாட்டுநர்கள்ஃபயறிறுவிப்பாளர்களின் ஊடாக எயிற்கின் ஸ்பென்ஸ் ஊழியர்கள் அனைவரையும் இணைப்பதற்கான ஒன்லைன் தளம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்பென்ஸ் அசென்ட் (Spence Ascend)

எயிற்கின் ஸ்பென்ஸ் DE&I  நிகழ்ச்சி நிரல் மற்றும் நடைமுறையிலுள்ள #SpenceWomenatWork  தொனிப்பொருளின் ஒரு பகுதியாக, முகாமைத்துவப் பிரிவிலுள்ள 40 பெண் அலுவலர்களுக்கு குறுகிய அளவிலான MBA  படிப்புக்கு நிகரான தலைமைத்துவ அபிவிருத்தித் திட்டம் ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப் பயிற்சித் திட்டத்தை, முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிலையத்தின் ஒத்துழைப்புடன் குழுமத்தின் ர்சு பிரிவு நிர்வகித்தது. 

2030ஆம் ஆண்டிற்குள் தலைமைப் பதவிகளில் பெண்களின் சதவீதத்தை 30மூ ஆன அதிகரிக்கும் குழுமத்தின் குறிக்கோளுக்கு அமைய, எதிர்காலத்தில் தலைமைப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு உள்ளார்ந்த ஆற்றல்களைக் கொண்டுள்ள பெண் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.  

1983 தொடக்கம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி., கடற்த 150 ஆண்டுகளுக்கு மேலாக தரச்சிறப்பின் பாரம்பரியத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. 

இலங்கை, மாலைதீவு, ஃபீஜி, இந்தியா, ஓமான், மியன்மார், மொஸாம்பிக், பங்களாதேஷ் கம்போடியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 11 நாடுகளில் 16 தொழிற்றுறைகளில் 13இ000க்கு மேற்பட்ட ஊழியர்களை உள்ளடக்கிய அணியினால் அது இயக்கப்படுகின்றது.  

தேசமான்ய டீ.எச்.எஸ். ஜயவர்தன – தவிசாளர், எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி.   

ஸ்ட~hனி ஜயவர்தன - இணை பிரதித் தவிசாளர் மற்றும் இணை முகாமைத்துவப் பணிப்பாளர், எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி.    

கலாநிதி பராக்கிரம திசாநாயக்க – பிரதித் தவிசாளர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி. 

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் புரட்சிகரமான Ather 450X மின்சார...

2024-12-08 15:35:45
news-image

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளல்

2024-12-08 13:27:59
news-image

“சுதந்திர சிந்தனைகள்” ஜனசக்தி லைஃப் இன்...

2024-12-08 12:40:08
news-image

ஹேமாஸ் மருத்துவமனை 3D Laparoscopic சிறுநீரக...

2024-12-08 10:22:54
news-image

கால் நூற்றாண்டு கால முன்னேற்றம் Rafflesஇன்...

2024-12-08 10:23:42
news-image

இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு...

2024-12-08 09:43:38
news-image

புதுப்பொலிவு பெறும் இணையத்தளத்துடன் செயற்பாட்டுக்கு வரும்...

2024-12-07 13:33:25
news-image

நிதி ஸ்திரத் தன்மைக்கான கடன் ஆரோக்கியம்/மதிப்பீடுகளின்...

2024-12-03 18:40:55
news-image

Kedalla Art of Living 2024...

2024-12-03 18:39:19
news-image

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளில் ‘சிறந்த விமானப்...

2024-11-28 20:20:14
news-image

2024 / 2025ஆம் நிதியாண்டின் முதல்...

2024-11-26 18:06:14
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் 127...

2024-11-26 17:24:26