இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம் - வெள்ள முன்னெச்சரிக்கை !

Published By: Digital Desk 2

26 Nov, 2024 | 06:09 PM
image

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று செவ்வாய்க்கிழமை (26)  திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (26) பகல் வரை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 27 அடியை அண்மித்துள்ளது.

இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு  தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் நிறைந்து வருகின்றதுடன்,  பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்கும் ஆகியன வான் பாய்ந்து வருகின்றது.

இந்தநிலையில், தாழ்நில பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் நோக்குடன் பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.

ஞானிமடம், மட்டுவில்நாடு கிழக்கு, இரணைமாதா நகர், நல்லூர்,  பரமன்கிராய், கௌதாரிமுனை பகுதிகளில்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 10:59:21
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17