(எம்.ஆர்.எம்.வசீம்)
மின்சாரசபை இலாபமீட்டும்போது அதற்கு இணையாக மின்சார கட்டண சூத்திரத்துக்கு அமைய கட்டண திருத்தம் மேற்கொள்வது மின்சாரசபையின் பொறுப்பு. அவ்வாறு இருந்தும் மின்சாரசபை இந்த மின் கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானத்தை தாமதித்து வருவது அரசாங்கத்தின் தீர்மானமா என்ற கேள்வி எழுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை மின்சாரசபைக்கு கிடைக்கப்பெறும் இலாபத்தின் அடிப்படையில் அதன் ஊழியர்களுக்கு போனஸ் காெடுப்பனவு வழங்கப்பவேண்டும். ஆனால் மின்சாரசபை நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கான போனஸ் கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுத்துவருவதாகவே தெரியவருகிறது. ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.
அதேபோன்று மின்சாரசபை பெற்றுவரும் இலாபத்துக்கு இணையாக மின்சார கட்டணம் குறைக்கப்பட வேண்டும். மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபையிடம் பிரேரணை ஒன்றை கேட்டுள்ளபோதும். மின்சாரசபை அதனை வழங்குவதை காலம் தாழ்த்தி வருவதாகவே காணக்கூடியதாக இருக்கிறது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டணம் திருத்தம் தொடர்பான பிரேரணையை ஆரம்பமாக இந்த மாதம் ஆரம்பத்தில் கேட்டிருந்தது. அதன் பின்னர் இந்த மாதம் 22ஆம் திகதி கேட்டிருந்தது.
தற்போது டிசம்பர் 6ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு பொப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அப்போதும் மின்சாரசபை மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணையை வழங்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
அதேநேரம் மின்சாரசபை, மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணையை டிசம்பர் மாதம் வழங்காவிட்டால், மின்சாரசபை அடைந்துள்ள இலாபத்தின் அடிப்படையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரசபை இலாமீட்டும்போது அதற்கு இணையாக மின்சார கட்டண சூத்திரத்துக்கு அமைய கட்டண திருத்தம் மேற்கொள்வது மின்சாரசபையின் பொறுப்பு. அவ்வாறு இருந்தும் மின்சாரசபை இந்த மின் கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானத்தை தாமதித்து வருவது அரசாங்கத்தின் தீர்மானமா என்ற கேள்வி எமக்கு எழுகிறது.
அதனால் மின்சாரசபை பிரச்சினைகளில் இருந்து தப்பிச்செல்லாமல் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM