30வது LMD வருடாந்த விழாவை முன்னிட்டு இலங்கையில் மூன்று தசாப்த காலம் முன்னனியில் விளங்கிய வர்த்தக மற்றும் கைத்தொழில் நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட விருது தெரிவு நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கி அதன் மூன்று தசாப்த கால சாதனைகளுக்காக இலங்கையின் அதிசிறந்த கூட்டாண்மை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தேசிய சேமிப்பு வங்கியின் சார்பில் அதன் தலைவர் Dr. Harsha Cabral PC இந்த உயர் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதானது வங்கியின் நவீனத்துவ செயற்பாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வங்கியி உறுதியான பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் ஒரு சாதனைப் பதிவாக விளங்குவதுடன் நிதிசேவைகளில் மட்டுமன்றி இலங்கையில் பரந்த கூட்டாண்மை செயற்பாடுகளில் தேசிய சேமிப்பு வங்கி செல்வாக்குமிக்கதொரு முன்னனியாளராக விளங்குவதையும் எடுத்துக்காட்டியுள்ளது.
25 முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களிடையே தேசிய சேமிப்பு வங்கி பெற்றுள்ள விருதும் அங்கீகாரமும் தேசிய சேமிப்பு வங்கி கடந்த மூன்று மூன்று தசாப்தங்களாக அதன் வங்கி சேவைகளில் தொடர்ந்து பேணி வந்த உயர்ந்த தரப்பாடுகளையும் பொருளாதார வங்கியில் வங்கின் பங்களிப்புகளையும் எடுத்துக் கூறுவதாகவும் உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்த உயர் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் தேசிய தேசிய சேமிப்பு வங்கி பணிவுடன் கொண்டாடுவதுடன் எதிர்காலத்தின் அதன் நிதி சேவைகள் மேம்பாட்டுக்காகவும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் மேலும் சேவைகளையும் திட்டங்களையும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM