உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர எந்தவொரு தடையும் இல்லை - அரசாங்கம்

26 Nov, 2024 | 04:46 PM
image

உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

 அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரினால் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,  

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தீவிரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்காக நிதி சேகரித்தல், ஒன்று கூடுதல், பிரசாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி, இலச்சினை மற்றும் கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமையவே, நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி, இலச்சினை, கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம். 

 அதேநேரம், உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை. 

உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதும் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதும் ஒன்றல்ல. ஆகவே இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். 

 உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ள அதேநேரம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54