திருகோணமலை, தெவனிபியவரப் பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு நால்வர் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெவனிபியவரப் பகுதியைச் சேர்ந்தவர்களான சாமர மதுசங்க (03), வை.சுனீதா குமாரி (25) எம்.எம்.சஞ்சீவ (32), டபிள்யூ.திலகாவத்தி (27) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

விஜய பாலர் பாடசாலையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளவிக் கூடு கலைந்த நிலையில் அதிலிருந்த குளவிகள் இவர்களை கொட்டியுள்ளது.   

உடனடியாக மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.