கனமழையால் தம்பலகாமத்தில் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்

Published By: Vishnu

25 Nov, 2024 | 10:34 PM
image

சீரற்ற காலநிலையின் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கி நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கன மழை காரணமாக தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது இதனால் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர தொடர் அடை மழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், பாலம் போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அதிகளவான நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிகளில் நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து பெகோ இயந்திரத்தை கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாலம்போட்டாறு கிராம சேவகர் பகுதியில் உள்ள பத்தினிபுர மக்கள் சில குடும்பங்கள் அருகாமையில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக ஏனைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குறித்த பகுதியில் போக்குவரத்து மற்றும் தடைப்படும் நீரை வெளியேற்ற சகல நடவடிக்கைகளும் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தரும் களத்தில் நின்று கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17