(நெவில் அன்தனி)
உலக டென்னிஸ் அரங்கில் ஆண்களுக்கான உலகக் கிண்ண டென்னிஸ் போட்டி என வருணிக்கப்படுவதும் 124 வருட வரலாற்றைக் கொண்டதுமான டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் இத்தாலி இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
நெதர்லாந்துக்கு எதிராக ஸ்பெய்னின் மலாகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2 - 0 ஆட்டங்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற இத்தாலி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.
நெதர்லாந்து தனது 104 வருட டேவிஸ் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இதுவே முதல் தடவையாகும்.
1976இல் முதல் தடவையாக டேவிஸ் கிண்ணத்தை வென்றெடுத்த இத்தாலி இதுவரை 3 தடவைகள் உலக சம்பியனாகி இருக்கிறது.
இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள், ஓர் ஒற்றையர் ஆட்டம் என 3 ஆட்டங்களைக் கொண்ட இறுதிப் போட்டியில் முதல் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இத்தாலி வெற்றிபெற்றததால் இரட்டையர் ஆட்டத்திற்கு அவசியம் ஏற்படவில்லை.
முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் நெதர்லாந்தின் போட்டிக் வென் டி ஸாண்ட்ஸ்சூல்ப் என்பவரை எதிர்த்தாடிய இத்தாலியின் மெட்டீயோ பெரெட்டினி 6 - 4, 6 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இலகுவாக வெற்றிபெற்றார்.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் டெலொன் க்றீக்ஸ்பூரிடம் சவாலை எதிர்கொண்ட உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் 7 (7) - 6 (2), 6 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 செட்களில் வெற்றிபெற்று இத்தாலியை டேவிஸ் கிண்ண சம்பியனாக்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM