வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று (13) காலை உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டு  சிறைத்தண்டனை பெற்றுவந்த சி.சமூவேல் (66) என்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதியே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சடலம் வைத்திய பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.