இன்றைய திகதியில் விளிம்பு நிலையில் வாழும் ஏழை மற்றும் எளிய மனிதர்கள் முதல் கோடி கணக்கில் பணத்தில் புரளும் தனவந்தர்கள் வரை கடன் என்பது வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். இவர்களுக்கு நாளாந்தம் கடன் பிரச்சனையை விவரிக்க இயலாத அளவிற்கு துன்பத்திற்கு ஆளாகி கொண்டே எதிர்கொள்கிறார்கள்.
ஆனால் கடன் பிரச்சனை தீர்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல்வேறு வகையினதான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.அதே தருணத்தில் கடன் வாங்குவது என்பது அத்தியாவசியமான விடயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர அனாவசியமான விடயங்களுக்காக இருக்கக் கூடாது என்பதையும் ஆன்மீக முன்னோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு இன்றைய திகதியில் கடன் அட்டை மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வது என்பது இயல்பாகிவிட்டது. சேமிப்பு என்பது அரிதாகி விட்டது. கடந்த கால தசாப்தத்தில் எம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த எளிய பொருளாதார பாதுகாப்பு வழிமுறை சேமிப்பு .
ஆனால் இன்றைய இளைய மற்றும் இணைய தலைமுறையினர் சேமிப்பின் மகத்துவத்தை அறிந்து கொள்ளாமல் தங்களுடைய வருவாய்க்கு ஏற்ற அளவில் வாழ்க்கையை திட்டமிடாமல் 'இருப்பது ஒரே வாழ்க்கை தான் அதனை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஆடம்பரமாகவும் வாழ வேண்டும்' என விரும்பி வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளுக்கு பெற்று, செலவழித்துவிட்டு அதன் பிறகு அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
அதனை தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டு கடன் பிரச்சனை தீர்வதற்கான வழி வகைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக் தருணத்திலும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கடன் பிரச்சனை தீர்வதற்கான பல்வேறு வழிமுறைகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை தொடர்ந்து காண்போம்.
செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அல்லது வில்வம் சாற்றி கடன் தீருவதற்கான வழிவகையை ஏற்படுத்தித் தாருங்கள் என மனதார பிரார்த்திக்க வேண்டும்.
அத்துடன் புதிதாக கடன் வாங்க மாட்டேன் என்று மனதில் சபதம் எடுத்துக்கொண்டால். உங்களுடைய கடன் பிரச்சனை தீர்வதற்கான வழிமுறை கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்து வரவில்லை என்றால்...?! என எம்மில் சிலர் கேட்பார்கள். பூச நட்சத்திரம் வரும் நாளில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.
அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு கொள்ளு எனும் தானியத்தை உணவாக தயாரித்து அதனை தானமாக வழங்கினாலும் கடன் பிரச்சனை தீரும்.
அருகில் இருக்கும் சிவாலயத்தில் நடைபெறும் வேள்வி அல்லது யாகத்தில் அமர்ந்திருக்கும் சிவாச்சாரியார்களுக்கு தர்ப்பை புல்லை தானமாக வழங்கினாலும்.. கடன் பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கும்.
உங்களின் வீட்டின் அருகிலோ அல்லது நீங்கள் சாலையில் பயணிக்கும் போது வீதி ஓரங்களிலோ அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற மனநிலை தவறியவர்கள் இருந்தால் .. அவர்களை அணுகி, அன்பாகவும், அனுசரணையாகவும் பேசி, சிகை அலங்காரம் செய்து, நீராட வைத்து, உணவளித்தாலும் உங்களுடைய கடன் பிரச்சனை குறைய தொடங்கும்.
சிவாலயங்களில் முதிய வயதில் சன்னியாசம் மேற்கொண்டிருக்கும் ஏழு நபர்களுக்கு அவர்கள் விரும்பும் வண்ணத்தில் குறிப்பாக காவி வண்ணத்தில் உடைகளை தானமாக வழங்கினாலும் உங்களுடைய கடன் பிரச்சனை குறையும்.
கடன் தீருவதற்கான பரிகாரங்களை உங்களுடைய வருவாயிலிருந்து சேமித்து மேற்கொள்ள வேண்டும். இதனையும் மற்றவர்களிடம் கடன் வாங்கி செய்யக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய பரிகாரங்களை தொடர்ச்சியாக ஒன்பது வாரங்களுக்கு மேற்கொண்டால் கடன் பிரச்சனை தீர்ந்து வருவாய் அதிகரித்து சேமிக்க தொடங்குவதையும் அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM