கொழும்பு கோட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கட்டிடத்தொகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கட்டிடத்தொகுதியை அமைப்பதற்கான அகழ்வு பணிகள் இடம்பெற்றுவந்த போ குறித்த இடத்தில் மனித எச்சங்கள் இருப்பதை தொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த மனித எச்சங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.