ஆஸி.க்கு எதிரான முதலாவது டெஸ்டில் 295 ஓட்டங்களால் இந்தியா மகத்தான வெற்றி !

Published By: Digital Desk 2

25 Nov, 2024 | 03:02 PM
image

(நெவில் அன்தனி)

பேர்த் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 295 ஓட்டங்களால் இந்தியா மகத்தான வெற்றி ஈட்டியது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய திறமை, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹம்மத் சிராஜ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

மேலும் ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக இப் போட்டியில் அணித் தலைமையைப் பொறுப்பேற்ற ஜஸ்ப்ரிட் பும்ரா, அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி அடையச் செய்தார்.

நான்கு நாட்களில் நிறைவுபெற்ற இப் போட்டியில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறின.

அவுஸ்ரேலியர்களின் வேகப்பந்துவீச்சுகளில் இந்தியா 150 ஓட்டங்களைப பெற்றதுடன் இந்தியர்களின் வேகப்பந்தவீச்சுகளில் அவுஸ்திரேலியா 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 46 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்ளை இழந்து 487 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

மிகவும் கடினமான 534 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 12 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, மொத்த எண்ணிக்கை 79 ஒட்டங்களாக இருந்தபோது 5ஆவது விக்டெக்டை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

மத்திய வரிசை வீரர்களான ட்ரவிஸ் ஹெட் (89), மிச்செல் மார்ஷ் (47), அலெக்ஸ் கேரி (36) ஆகியோர் சற்று நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியதால் அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது. ஆனால், அவர்களால் அவுஸ்திரேலியாவின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக ஹர்ஷித் ராணா, நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் அவுஸ்திரேலியா சார்பாக நேதன் மெக்ஸ்வீனியும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 150 (நிட்டிஷ் குமார் ரெட்டி 41, ரிஷாப் பான்ட் 37, கே.எல். ராகுல் 26, ஜொஸ் ஹேஸ்ல்வூட் 29 - 5 விக்., மிச்செல் மாஷ் 12 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 14 - 2 விக். பெட் கமினஸ் 67 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 104 (மிச்செல் ஸ்டாக் 26, அலெக்ஸ் கேரி 21, ஜஸ்ப்ரிட் பும்ரா 30 - 5 விக்., ஹர்ஷித் ராணா 48 - 3 விக்., மொஹம்மத் சிராஜ் 20 - 2 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 487 - 6 விக். டிக்ளயார்ட் (யஷஸ்வி ஜய்ஸ்வால் 161, விராத் கோஹ்லி 100 ஆ.இ., கே.எல். ராகுல் 77, நிட்டிஷ் குமார் ரெட்டி 38 ஆ.இ., உதரிகள் 55, நேதன் லயன் 96 - 2 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 534) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 238 (ட்ரவிஸ் ஹெட் 89, மிச்செல் மாஷ் 47, அலெக்ஸ் கேரி 36, ஜஸ்ப்ரிட் பும்ரா 42 - 3 விக்., மொஹம்மத் சிராஜ் 51 - 3 விக்., வொஷிங்டன் சுந்தர் 48 - 2 விக்.)

ஆட்டநாயகன்: ஜஸ்ப்ரிட் பும்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33