19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் நியூட்டன், மாதுளன், ஷாருஜன்

Published By: Digital Desk 2

25 Nov, 2024 | 03:55 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் நியூட்டன் , குகதாஸ் மாதுளன், கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இந்த மூவரில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் ஷாருஜன் ஏற்கனவே கனிஷ்ட தேசிய அணியில் இடம்பெற்றவராவார்.

இடதுகை துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான ஷாருஜன், இந்த வருட முற்பகுதியில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.

யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ச்த இடதுகை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட தேசிய கனிஷ்ட அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

வடக்கின் சமர் மாபெரும்  கிரிக்கெட்  போட்டியின் கடந்த இரண்டு அத்தியாயங்களில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திறமையை வெளிப்படுத்திய நியூட்டன், தம்புள்ளை பிராந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் இலங்கை தெரிவாளர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

அதேவேளை, லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன், யோக்கர் பந்துவீசுவதில் தேர்ச்சிபெற்றவர். அவரது பந்துவீச்சுப் பாணியை சமூக வலைத்தளத்தில் பார்த்து பெரிதும் கவரப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம். எஸ். தோனி அவரை சென்னைக்கு அழைப்பித்து அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக தேர்ஸ்டன் கல்லூரி வீரர் விஹாஸ் தெவ்மிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை  அணி விபரம்

விஹாஸ் தெவ்மிக்க (தலைவர்), தனுஜ ராஜபக்ஷ (இருவரும் தேர்ஸ்டன்), புலிந்து பெரேரா, லக்வின் அபேசிங்க (இருவரும் தர்மராஜ), துல்னித் சிகேரா (மஹநாம), சண்முகநாதன் ஷாருஜன் (புனித ஆசீர்வாதப்பர்), ரஞ்சித்குமார் நியூட்டன் (யாழ். மத்திய கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விமத் தின்சார, ரமிரு பெரேரா (இருவரும் றோயல்), கவிஜ கமகெ (கிங்ஸ்வூட்), விரான் சமுதித்த (மாத்தறை புனித சர்வேஷியஸ்), ப்ரவீன் மனீஷ (லும்பினி) யெனுல தெவ்துச (புனித சூசையப்பர்), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும்...

2025-12-17 17:21:39
news-image

பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி...

2025-12-17 17:19:28
news-image

எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை...

2025-12-17 15:11:02
news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை...

2025-12-16 03:17:32