மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; வெள்ள நீரை வெளியேற்ற கோரிக்கை

Published By: Vishnu

25 Nov, 2024 | 02:52 AM
image

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த கிராமத்தில் 108 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குறித்த கிராமத்திற்குச் செல்லும் பாதைக்கு அமைக்க நீர் வெளியேறிச் செல்லும் மதகை (போக்) அவ்விடத்தில் கொண்டு வரப்பட்டு 4 வருடங்களாகிய நிலையில் அவற்றை உரிய முறையில் செப்பனிடவில்லை.

குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தால் வெள்ள நீர் தமது கிராமத்தில் தேங்காது எனவும்,குறித்த நடவடிக்கையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் வெள்ள நீரை தமது கிராமத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

எனினும் தலை மன்னார் பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

குறித்த பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் மக்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16