bestweb

2025 ஐபிஎல் வீரர்களுக்கான முதலாம் கட்ட ஏலத்தில் ரிஷாப் பான்ட்டுக்கு அதிக விலை

Published By: Vishnu

24 Nov, 2024 | 08:33 PM
image

(நெவில் அன்தனி)

2025இல் நடைபெறவுள்ள 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான முதலாம் கட்ட ஏலத்தில் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் 27 கோடி ரூபா (இந்திய நாணயம்) அதிவிலைக்கு லக்னோ சுப்பர் ஜயன்ட்டஸ் அணியினால் வாங்கப்பட்டார்.

574 வீரர்களுக்கான மேகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பித்தது. இந்த ஏலம் நேற்று இரவு வரை நடைபெற்றதுடன் இன்றைய தினமும் தொடரவுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 10 அணிகளின் உரிமையாளர்களும் முகாமைத்துவக் குழுவினரும் இந்த ஏலத்தில் கலந்துகொள்கின்றனர். 81 வீரர்களின் அடிப்படை ஏல விலை 2 கோடி ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணிவரை நடத்தப்பட்ட அதிசிறப்பு வாய்ந்த வீரர்களுக்கான முதலாம் கட்ட ஏலத்தில் 12 வீரர்கள் அணிகளினால் வாங்கப்பட்டனர்.

இந்த ஏலத்தில் இந்திய வீரர்களான ரிஷாப் பான்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் 25 கோடி ரூபாவுக்கு மேல் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் இடையில் ஏல விலை வித்தியாசம் 25 இலட்சம் ரூபாவாக இருந்தது.

ரிஷாப் பான்டை 27 கோடி ரூபாவுக்கு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வாங்கியது.

அவருக்கு அடுத்ததாக ஷ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 இலட்சம் ரூபா என்ற இரண்டாவது அதிக விலைக்கு வாங்கிய பஞ்சாப் கிங்ஸ், இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோரை தலா 18 கோடி ரூபாவுக்கு தனது அணியில் இணைத்துக்கொண்டது.

இதற்கு அமைய முதலாம் நாளன்று பிற்பகல் 5.30 மணிவரை நடத்தப்பட்ட முதலாம் கட்ட ஏலத்தில் அதிக விலைகளுக்கு வாங்கப்பட்ட முதல் நான்கு வீரர்களும் இந்தியர்களாவர்.

வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டவர் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜொஸ் பட்லர் ஆவார்.

அவரை 15.75 கோடி ரூபாவுக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.

நேற்றை தினம் பிற்பகல் 5.30 மணிவரை ஏலத்தில் வாங்கப்பட்ட ஏனைய வீரர்கள் விபரம் வருமாறு:

கே.எல். ராகுல் (இந்தியா) - 14 கோடி ரூபா - டெல்ஹி கெப்பிட்டல்ஸ்

மொஹமத் சிராஜ் (இந்தியா) - 12.25 கோடி ரூபா - குஜராத் டைட்டன்ஸ்

மிச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) - 11.75 கோடி ரூபா - டெல்ஹி கெப்பிட்டல்ஸ்ஷ

கெகிசோ ரபாடா (தென் ஆபிரிக்கா) - 10.75 கோடி ரூபா - குஜராத் டைட்டன்ஸ்

மொஹமத் ஷமி (இந்தியா) - 10 கோடி ரூபா - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

லியாம் லிவிங்ஸ்டோன் (இங்கிலாந்து) - 8.75 கோடி ரூபா - றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா) - 7.50 கோடி ரூபா - லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், மும்;பை இண்டியன்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55