இறுதிக்கட்ட பரபரப்பில் எவ்.ஏ.கிண்ணம் நான்கு அணிகள் இன்று களத்தில்

Published By: Priyatharshan

13 May, 2017 | 11:07 AM
image

எவ்.ஏ. கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொடர் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில்,தொடரின் அரை­யி­றுதிச் சுற் றின் விறு­வி­றுப்­பான இரண்டு போட்­டிகள் சுக­த­தாச விளை­யாட்டு அரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ளன. 

கடந்த வரு­டத்தை போன்றே இம்­மு­றையும் பல­மிக்க கொழும்பு எவ்.சி கழகம் மற்றும் இரா­ணு­வப்­படை விளை­யாட்டுக் கழக அணிகள் அரை­யி­றுதிப் போட்­டியில் சந்­திக்­கின்­றன.

அடுத்த அரை­யி­றுதிப் போட்­டியில் ரசி­கர்­களின் ஆத­ர­வினை அதி­க­ளவில் கொண்­டி­ருக்­கின்ற ஜாவா லேன் விளை­யாட்டுக் கழகம் மற்றும் சோண்டர்ஸ் விளை­யாட்டுக் கழக அணிகள் மோது­கின்­றன.

நடப்பு சம்­பியன் இரா­ணுவ அணிக்கும் 2015 சம்­பியன் கொழும்பு எவ்.சி. அணிக்கும் இடை­யி­லான போட்டி கடை­சி­வரை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என நம்­பப்­ப­டு­கின்­றது. 

இரண்டு அணி­க­ளிலும் அனு­பவம் வாய்ந்த தேசிய வீரர்கள் இடம்­பெ­று­வ­தாலும் கால்­பந்­தாட்ட நுட்­பங்­களை அவர்கள் வெளிப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வர்கள் என்­ப­தாலும் இந்தப் போட்டி இர­சி­கர்­களைப் பெரிதும் கவரும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

இப் போட்­டியைப் பொறுத்­த­மட்டில் இரா­ணுவ அணியின் வேகத்­திற்கும் கொழும்பு எவ்.சி. அணியின் விவே­கத்­திற்கும் இடை­யி­லான போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

கொம்­பனித் தெரு, ஜாவா லேன் அணி இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது அரை இறு­தியில் முன்னாள் சம்­பியன் சோண்டர்ஸ் அணியை வெற்­றி­கொண்டு வர­லாறு படைக்க முயற்­சிக்­க­வுள்­ளது.

இரண்டு அணி­க­ளிலும் சிரேஷ்ட வீரர்­க­ளுடன் இளம் வீரர்கள் இடம்பெறுவதால் இப் போட்டியில் வேகத்திற்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்