யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (23) யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன் மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM