மலை­ய­கத்தில் வாழும் மக்­களின் இருப்பை நிரந்­த­ர­மாக்­கு­வ­தற்கு மக்கள் கிரா­மங்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தோடு எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­காக பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை அமைப்­ப­தற்கும் எமக்கு உத­வி­ய­ளி­யுங்கள் என இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யிடம் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நேரில் கோரிக்கை விடுத்­தது. 

குறித்த கோரிக்­கைகள் தொடர்­பாக கவனம் செலுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்த இந்­தி­யப்­பி­ர­தமர் அவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக விரி­வான அறிக்­கை­யொன்றை இந்­திய தூதுவர் ஊடாக தனக்கு விரைந்து அனுப்பி வைக்­கு­மாறும் குறிப்­பிட்­டுள்ளார்.

மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்ய இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை மக்கள் பயன்­பாட்­டிற்­காக திறந்து வைத்­ததன் பின்னர் நோர்­வூட்டில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டார்.அத­னைத்­தொ­டர்ந்து இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உயர்­மட்­டக்­கு­ழு­வி­ன­ருடன் பிரத்­தி­யேக சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தார். 

இச்­சந்­திப்பில் இலங்­கைத்­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் சார்பில் அதன் தலைவர் முத்­து­சி­வ­லிங்கம் எம்.பி, பொதுச்­செ­ய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான், மத்­தி­ய­மா­காண சபை அமைச்சர் ரமேஷ்­வரன், சபை தவி­சாளர் மதி­யு­க­ராஜா, ஊவா மாகாண சபை அமைச்­சரும் உப தலை­வ­ரு­மான செந்தில் தொண்­டமான், மாகாண சபை உறுப்­பினர் சக்­திவேல் மற்றும் அனு­ஷியா சிவ­ராஜா, சிவ­ராஜா உள்­ளிட்டோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இந்­தி­யப்­பி­ர­தமர் மோடி­யுடன் இந்­திய தூதுவர் தரன்­ஜித்சிங் சந்து, வௌிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெய்­சங்கர் மற்றும் தூத­ரக அதி­கா­ரிகள் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பு குறித்து இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­விக்­கையில், 

இந்­தி­யப்­பி­ர­தமர் எம்மை சந்­திப்­ப­தற்கு நேர ஒதுக்­கீட்டை செய்­த­மைக்­காக நாம் நன்­றி­களைத் தெரி­வித்துக் கொண்டோம். அதனைத் தொடர்ந்து மலை­யக மக்­க­ளுக்­காக நான்­கா­யிரம் வீடு­களை வழங்­கி­ய­மைக்கு நன்­றி­களைத் தெரி­வித்தோம். இன்­றை­ய­தினம் (நேற்று) தனது உரையில் மேலும் பத்­தா­யி­ரம வீடு­களை மலை­யக மக்­க­ளுக்­காக வழங்­கி­ய­மைக்கும் நாம் நன்­றி­களைத் தெரி­வித்தோம். 

ஆத­னைத்­தொ­டர்ந்து நாம் அவ­ரி­டத்தில் சில கோரிக்­கை­களை முன்­வைத்தோம். குறிப்­பாக 200வருட வர­லாற்றைக் கொண்ட தோட்­டத்­தொ­ழி­லாளர் அண்­மைக்­கா­ல­மாக இந்த பூர்­விக பூமியை விட்டு நக­ரங்­களை நோக்கிச் செல்­லு­கின்ற நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 

குறிப்­பாக தோட்­டங்கள் பகி­ரப்­ப­டுதல்இ வௌியா­ருக்கு விற்­பனை செய்­வதால் நில­வு­ரி­மை­யற்­றுள்ள மக்கள் இவ்­வாறு இடம்­பெ­யர்ந்து செல்லும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்­பாக நாம் அர­சாங்­கத்தின் கவத்­திற்கு கொண்டு சென்­றுள்ள போதும் அவர்கள் எடுக்கும் நட­வ­டிக்­கைகள் போது­மா­ன­தா­க­வில்லை. 

இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்­கு­மா­க­வி­ருந்தால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் இருப்பு என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­விடும். ஏதிர்­கா­லத்தில் ஒரு சமுகம் அடை­யா­ளங்­களை இழந்து அழிந்து விடும் நிலைமை ஏற்­பட்டு விடும். ஆகவே தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நில உரி­மையை உறுதி செய்யும் வகையில் மலை­ய­கத்தில் மக்கள் கிரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. 

ஆதற்­கு­ரிய நிலங்­களை பெற்­றுக்­கொ­டுப்­பது உள்­ளிட்ட விட­யங்­களை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் முன்­னின்று செய்யும். அவ்­வா­றன நிலையில் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு இந்­திய அர­சாங்கம் உத­வி­களை வழங்க வேண்டும் எனக் கோரினோம். 

ஆத்­துடன் மலை­யக சமு­கத்தின் எதிர்­கா­லத்தை உறு­திப்­படும் ஒரே ஆய­த­மாக கல்வி காணப்­ப­டு­கின்­றது. துற்­போ­தைய நிலையில் கல்­வித்­து­றையில் மலை­யக மக்கள் முன்­னேற்றம் அடைந்து வரு­கின்­ற­போதம் பல்­க­லைக்­கல்வி என்­பது இன்­னமும் எட்­டாக்­க­னி­யா­கவே உள்­ளது. இதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு நாம் முயற்­சி­களை மேற்­கொண்ட போதும் அவை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 

இலங்­கையில் காணப்­படும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மலை­யக பகு­தி­களில் உள்ள மாண­வர்­க­ளுக்கு வாய்ப்­புக்கள் கிடைப்­ப­தென்­பது குறை­வா­கவே உள்­ளது. ஆகவே விசேட கோட்டா முறை­மை­யொன்றை மலை­யக மாண­வர்­க­ளுக்­காக மேற்­கொள்ள வேண்­டு­மெனக் கோரி­யுள்ளோம். 

எவ்­வா­றி­யினும் மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது எமது நீண்­ட­காலக் கன­வாகும். ஆதற்­கு­ரிய காணி­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு எமது கட்சி தயா­ர­க­வுள்­ளது. ஆகவே ஏனைய நிர்­மான மற்றும் உட்­கட்­ட­மைப்பு ஏற்­பா­டு­க­ளுக்கு தாங்கள் உத­வி­ய­ளிப்­பீர்கள் என எதிர்­பார்­கின்றோம் எனக் குறிப்பிட்டோம்.

ஆத்துடன் இதுவரை காலமும் எமக்காக இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் நெருங்கிய தாய் நாடாக இந்தியாவையே கருதுகின்றோம் என்பதையும் அவரிடத்தில் தெரிவித்தோம்.

இச்சமயத்தில் எமது கோரிக்கைகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறிய இந்தியப் பிரதமர் மோடி அவ்விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை இந்திய தூதரகம் ஊடாக அனுப்பி வைக்குமாறும் தான் அது குறித்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.