அர­சி­யல் தீர்வில் மலையக மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் : மோடி­யிடம் த.மு.கூ.

Published By: Priyatharshan

13 May, 2017 | 10:37 AM
image

இலங்­கையில் அர­சியல் தீர்வு ஏற்­படும் போது மலை­யக மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். என தமிழ் முற்­போக்கு கூட்­டணி இந்­தியப் பிர­தமர் மோடி­யிடம் நேரில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. மலை­ய­கத்­திற்கு தனி­யான ஒரு பல்­க­லைக்­க­ழகம், 25000 வீடுகள், பாட­சா­லைகள், ஆசி­ரியர் பயிற்­சிகள் உள்­ளிட்ட அனைத்து தேவைப்­பா­டு­க­யையும் உள்­ள­டக்­கிய விரி­வான மகஜர் ஒன்­றையும் அக்­கூட்­டணி இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் கைய­ளித்­துள்­ளது.

மலை­ய­கத்­திற்கு நேற்று வௌ்ளிக்­கி­ழமை விஜயம் செய்த இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கும் அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணிக்கும் இடை­யி­லான பிரத்­தி­யேக சந்­திப்பு நோர்­வுட்டில் இடம்­பெற்­றது. 

இதன் போது அமைச்சர் மனோ­க­ணேசன் தலை­மையில் அமைச்சர் திகா­ரம்­பரம், இரா­ஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்னண், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான வேலு­குமார், அர­விந்த குமார், தில­கராஜ், மற்றும் லோறன்ஸ் ஆகியோர் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

அதே­நேரம் இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து, இந்­திய வௌிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெய் சங்கர் உள்­ளிட்ட உயர் அதி­கா­ரிகள் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இச்­சந்­திப்பு குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நாட்டில் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கு செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றது. அவ்­வா­றான நிலையில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வொன்று வரும் போது மலை­யக மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்ட வேண்டும். அவர்­களின் இருப்பு ஸ்தீரத் தன்­மை­யாக்­கப்­பட வேண்டும் என தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யி­னரால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

மலை­ய­கத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக தோட்ட தொழி­லா­ளர்கள் சொந்த நிலங்­க­ளற்றும் இருக்­கின்­றனர். அவர்­க­ளுக்­கான சொந்த நிலங்­களை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பா­டு­களை அம்­மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அந்தச் செயற்­பாடு முழுமை பெறு­வ­தற்கு தங்­களின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். அதே­நேரம் மலை­ய­கத்தில் 25ஆயிரம் வீட்டுத் தேவை காணப்­ப­டு­கின்­றது. தாங்கள் ஏற்­க­னவே 4 ஆயிரம் வீடு­களை வழங்­கி­யுள்­ளீர்கள் இன்று (நேற்று) 10 ஆயிரம் வீடு­களை வழங்­கு­வ­தா­கவும் கூறி­யுள்­ளீர்கள். அதற்கு எமது நன்­றிகள். 

எஞ்­சி­யுள்ள வீட்டுத் தேவையும் தாங்கள் புர்த்தி செய்­வீர்கள் என்று நம்­பு­கின்றே?ம். மேலும் மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் என்­பது காணல் விட­ய­மா­கின்­றது. ஆகவே பல்­க­லைக்­க­ழ­கத்தின் அவ­சி­யத்தை எமது மக்­களும் நாமும் வெகு­வாக உணர்ந்­துள்ளோம் அதன் நிர்­மா­னிப்­புக்­கு­ரிய உத­வி­களை தங்கள் தலை­மை­யி­லான அரசு வழங்­கு­மென நம்­பிக்கை கொண்­டுள்ளோம் இதே­போன்று பாடசாலை அபிவிருத்திஇ ஆசிரியர் பயிற்சிகள் சுகாதார உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் ஆகியவற்றுக்கும் தங்களின் அரசு பங்களிக்கும் என நம்புகின்றோம்.

எமது ஒட்டுமொத்த கோரிக்கைகளையும் விரிவாக உள்ளடக்கிய மகஜரை தங்களிடத்தில் சமர்பிக்கின்றோம் இதற்கு வெகுவிரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55