(மனோகரன் பிரியங்கா)
மாஸ்டர் லீடர்ஸ் வேல்ட் வைட் நிறுவனத்தின் வாழ்க்கை திறன் அபிவிருத்தி ஆய்வுகூட அறிமுக நிகழ்வும் செய்தியாளர் மாநாடும் கொழும்பில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது.
மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் ஸ்தாபகர் டையன் அபேவர்தனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினர் மஹேஷி கொடகும்புர பிரேமசிங்க மற்றும் ஊடகவியலாளர்கள் இந் நிறுவனத்துடன் தொடர்புடைய பலர் கலந்து கொண்டனர்.
மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் நோக்கமானது வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கான வாழ்க்கை தருகின்ற சிறந்த விடயங்களை பெற்றுக்கொள்வதற்கான தொடர்ச்சியாக முன்னேற்றத்திற்கான உள்நாட்டு திட்டம் மூலம் வலுப்படுத்துவதும் ஆளுமையை முன்னேற்றுவதும் ஆகும்.
மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் பணியானது மாஸ்டர் லீடர்கள் என்ற அடிப்படையில் சர்வதேச அளவில் வாழ்க்கையை மாற்றும், மகிழ்ச்சி அமைதியான மனம் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அன்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் வாழ்க்கை திறன் அபிவிருத்தி ஆய்வுகூடாமாக விளங்குதல் ஆகும் .
மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாவன,
- 1 . இந்த நிறுவனத்தில் நடத்தப்படுகின்ற அறிவு மேம்பாடு மற்றும் நடைமுறை பயிற்சிகள் மூலம் முற்போக்கான தனிப்பட்ட வளர்ச்சியை உறுதிப்படுத்தல்.
- 2. இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை வழங்குதல்.
- 3. தனிப்பட்ட இலக்குகள் , வாழ்க்கை பாதை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு உறுப்பினரின் தனிப்பட்ட முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணித்தல்.
- 4. மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைடின் தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் மதிப்பீட்டின் முழுமையான செயல்பாடுகளை ஆன்லைனில் அணுக கூடியதாக இருக்கும்.
- 5. உறுப்பினரை புதுப்பித்தல் மற்றும் உறுப்பினரை தக்கவைப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதிப்பீடு செய்தல் வேண்டும் .
மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் முக்கிய மதிப்புக்களாவான,
- பணிவு ; சுய முன்னேற்றத்திற்கான கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
- ஒருமைப்பாடு ; வாழ்க்கை திறன்களை வளர்க்கும் செயற்பாட்டில் மாஸ்டர் லீடர்ஸ் வேல்ட் வைட் நிறுவனத்துடன் நேர்மையாக இருத்தல்.
- கடின உழைப்பு ;முயற்சி , ஆற்றல் , நேரம் , அர்ப்பணிப்பு ஆகியவற்றை செலவிடுவதன் மூலம் சிறந்த பலன்களை அடைதல் .
- சிறப்பம்சம் ; கல்வி தலைமைத்துவத்தின் அனைத்து பணிகளும் முழுமை பெற பாடுபடுதல்.
- மரியாதை ; மாஸ்டர் லீடர்ஸ் வேர்ல்ட் வைட் நிறுவனத்தின் அலுவலக பொறுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் , இயக்குனர்கள் ஆகியோருக்கு உரிய மரியாதை வழங்குதல்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM