இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான உறவில் முக்­கி­ய­மான ஒரு சந்­தர்ப்­பத்தில் நாம் இப்­போது உள்ளோம். பல்­வேறு துறை­க­ளிலும் காணப்­படும் எமது பங்­கு­ட­மையில் உயர்­வான நிலையை எட்­ட­ வேண்­டிய வாய்ப்பு தற்­பொ­ழுது கிட்­டி­யுள்­ளது. அத்­துடன் எம்மைப் பொறுத்­த­வரை எமது நட்பின் வெற்­றி­யாக தங்­களின் முன்­னேற்­றத்­தையும் வெற்­றி­யை­யுமே கரு­து­கின்றோம் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி  தெரி­வித்தார். 

எந்­த­வி­த­மான கட்­டுப்­பா­டு­களும் இன்றி வர்த்­தகம், முத­லீ­டுகள், தொழில்­நுட்பம், சிந்­த­னைகள், எல்­லை­களைக் கடந்து பரஸ்­பர நலன்­க­ளுக்­காக பய­ணிப்­ப­தனை நாம் நம்­பு­கின்றோம். இந்­தி­யாவின் துரி­த­மான வளர்ச்சி மூலம்  இலங்கை உட்­பட முழுப் பிராந்­தி­யமும் நன்­மை­ய­டைய வேண்டும். மேலும்  இந்து சமூத்­தி­ரத்தின் நீர்­நி­லை­யாக இருக்­கலாம் அல்­லது பூமி­யாக இருக்­கலாம். எவ்­வாறு இருப்­பினும் எமது சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பு பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

உங்கள் சமூ­கத்தின் முன்­னேற்றம் மற்றும் அமைதி ஆகி­ய­வற்­றுக்­கான உண்­மை­யான தெரி­வு­களை மேற்­கொள்ளும் நிலையில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் உங்கள் பெரும் முயற்­சிக்கு ஆத­ரவு வழங்கும் உண்­மை­யான பங்­க­ளா­ராக நண்­ப­ராக நீங்­களே இந்­தி­யாவை கண்­டு­கொள்­வீர்கள் என்றும்  இந்­திய பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.  

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த  இந்­திய பிர­தமர் மோடி பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்ற சர்­வ­தேச வெசாக் தின நிகழ்­வு­களில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புனி­த­மான ஒரு தினத்தில் இங்கு உரை­யாற்­று­வ­தற்கு என்னை அழைத்­த­மைக்­காக இலங்கை மக்­க­ளுக்கும் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கும் நான் நன்றி தெரி­விக்­கின்றேன். அதே­வேளை, கௌர­வ­மா­கவும் இதனைக் கரு­து­கின்றேன்.

பௌத்தம் பிறந்த மண்ணில் வாழும் 1.25 பில்­லியன் மக்­களின் வாழ்த்­துக்­க­ளையும் உங்­க­ளுக்கு இந்தச் சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்­கிறேன். எமது பிராந்­தியம் உலகில் மிகவும் பெறு­மதி நிறைந்த புத்­தரின் பரி­சையும் அவரின் போத­னை­க­ளையும் பெற்­றி­ருப்­பது சிறந்த அதிஷ்­ட­மாகும். 

எமது ஆட்சி, கலா­சாரம்  ஆகிய அனைத்­திலும் பௌத்தம் ஆழ­மாக பதிந்­துள்­ளது. எமது தேசிய இலட்­சி­னையின் முக்­கி­ய­மான பகு­திகள் பெள்­தத்தின் உள்­ளீ­டு­களில் இருந்து பெறப்­பட்­ட­வை­யாகும். உலகின் ஏனைய பகு­தி­க­ளுக்கு இந்­தி­யாவில் இருந்து பௌத்தம் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது. மகிந்­தவும் சங்­க­மித்­தையும் இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு தமது பய­ணத்தை மேற்­கொண்டு பௌத்த மதத்தின் பெரு­மையை இங்கும் சேர்த்­தி­ருந்­தனர். 

பௌத்­தத்தை போதிக்கும் அல்­லது கற்­பிக்கும் முக்­கிய மைய­மாக இலங்கை இன்று அமைந்­தி­ருக்­கின்­றது. பல நூற்­றாண்­டு­களின் பின்னர் அந­ரா­க­ரீக தர்­ம­பா­லவும் இதே­போன்ற ஒரு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். எனவே  இம்­முறை இலங்­கை­யி­லி­ருந்து பௌத்­தத்தின் உத்­வே­கத்தை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலையில் இந்­தி­யா­வுள்­ளது. மாற்று வழியில் நீங்கள் எம்மை எமது சொந்த வழி­களில் வழி­ந­டத்­து­கின்­றீர்கள் என்­றுதான் கூற­மு­டியும்.

பௌத்­த­மா­னது இலங்கை மற்றும் இந்­திய  உறவின் முக்­கிய கருப்­பொ­ரு­ளாக காணப்­ப­டு­கின்­றது. அய­ல­வர்­க­ளாக இருக்கும் எமது இரு நாடு­க­ளி­னதும் உற­வு­முறை பல்­வேறு படி­மங்கள் ஊடாக சென்­றி­ருக்­கின்­றது.

சமூ­கங்­க­ளி­னதும் மக்­க­ளி­னதும் இத­யங்­களில் வாழும் உயர்ந்த நட்­பாக எமது நட்பு இன்று காணப்­ப­டு­கின்­றது. எமது பௌத்த பெறு­மா­னங்­களின் தொடர்­பு­களை கௌர­வப்­ப­டுத்தி மேலும் ஆழ­மாக்கும் வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் முதல் கொழும்­புக்கும் வார­ணா­சிக்கும் இடை­யி­லான நேரடி விமான சேவைகள் ஏயார் இந்­தியன்ஸ் விமான சேவை­யினால்   ஆரம்­பிக்­கப்­படும். 

அத­னூ­டாக  இலங்­கையை சேர்ந்த சிங்­கள சகோ­தர சகோ­த­ரிகள் பௌத்­தரின் புனித பூமிக்கு இல­கு­வான பய­ணத்­தினை மேற்­கொள்ள முடியும்.  அதே­போல தமிழ் சகோ­தர சகோ­த­ரி­களும் வார­ணா­சிக்கும் காசி விஸ்­வ­நா­தரின் புனித பூமிக்கும் செல்­ல­மு­டியும்.    

எமது உறவில் முக்­கி­ய­மான ஒரு சந்­தர்ப்­பத்தில் நாம் தற்­பொ­ழுது உள்ளோம். பல்­வேறு துறை­க­ளிலும் காணப்­படும் எமது பங்­கு­ட­மையில் உயர்­வான நிலையை எட்­ட­வேண்­டிய வாய்ப்பு தற்­பொ­ழுது கிட்­டி­யுள்­ளது. அத்­துடன் எம்மைப் பொறுத்­த­வரை எமது நட்பின் வெற்­றி­யாக தங்­களின் முன்­னேற்­றத்­தையும் வெற்­றி­யை­யுமே கரு­து­கின்றோம்.

இலங்­கையில் உள்ள சகோ­தர சகோ­த­ரி­களின் பொரு­ளா­தார செழு­மையை உறு­திப்­ப­டுத்­து­வதில் நாம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்ளோம். எமத அபி­வி­ருத்தி ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கை­களை மேலும் ஆழ­மாக்­கு­வ­தற்­காக  நேர­டி­யான முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

எமது மூல­தனம் செழுமை புலமை ஆகி­ய­வற்­றையும் பகிர்ந்து கொள்­வதில் தான் எமது பலம் தங்­கி­யுள்­ளது. முத­லீடு மற்றும் வர்த்­த­கத்தில் ஏற்­க­னவே நாம் மிக முக்­கி­ய­மான பங்­க­ளா­ராக இருக்­கின்றோம். மிகவும் அதி­க­ளவில் எந்­த­வி­த­மான கட்­டுப்­பா­டு­களும் இன்றி வர்த்­தகம், முத­லீ­டுகள், தொழில்­நுட்பம், சிந்­த­னைகள், எல்­லை­களைக் கடந்து பரஸ்­பர நலன்­க­ளுக்­காக பய­ணிப்­ப­தனை நாம் நம்­பு­கின்றோம். இந்­தி­யாவின் துரி­த­மான வளர்ச்சி மூலம் குறிப்­பாக இலங்கை உட்­பட முழுப் பிராந்­தி­யமும் நன்­மை­ய­டைய வேண்டும். 

உட்­கட்­ட­மைப்ப மற்றும் தொடர்­பாடல், போக்­கு­வ­ரத்து மற்றும் சக்தி ஆகிய துறை­களில் எமது ஒத்­து­ழைப்­பினை மேலும் அதி­க­ரிப்­ப­தற்கு இந்­தியா திட்­ட­மிட்­டுள்­ளது.

அதே­போல, விவ­சாயம், கல்வி, சுகா­தாரம், மீள்­கு­டி­யேற்றம், போக்­கு­வ­ரத்து, மின்­சக்தி, கலா­சாரம், நீர், வதி­விடம், விளை­யாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்­பா­டு­களின் ஒவ்­வொரு பிரி­வு­க­ளிலும் எமது அபி­வி­ருத்தி பங்­கு­டமை பரந்து காணப்­ப­டு­கின்­றது.

இன்று இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான அபி­வி­ருத்தி ஒத்­து­ழைப்பு 2.6 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை எட்­டி­யி­ருக்­கின்­றது. இலங்கை மக்கள் சமா­தானம்இ செழுமை மற்றும் பாது­காப்பு நிறைந்த எதிர்­கா­லத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தனை இலக்­காகக் கொண்டே இந்­தியா தொடர்ந்தும் ஆத­ரவு வழங்­கி­வ­ரு­கின்­றது. ஏனென்றால் இந்­தி­யாவில் வாழும் 1.25 பில்­லியன் மக்­க­ளுடன் இலங்கை மக்கள் நேர­டி­யான தொடர்­பினை கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் பொரு­ளா­தார சமூக நலன்­பு­ரி­களும் பிணைந்தே காணப்­ப­டு­கின்­றது. 

இந்து சமூத்­தி­ரத்தின் நீர்­நி­லை­யாக இருக்­கலாம் அல்­லது பூமி­யாக இருக்­கலாம். எவ்­வாறு இருப்­பினும் எமது சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பு பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கஇ ஜனா­தி­பதி சிறி­சேன ஆகி­யோ­ருடன் மேற்­கொண்­டி­ருந்த சந்­திப்பின் போது எமது பொது­வான இலக்­கு­களை எட்­டிக்­கொள்­வ­தற்­காக இரு தரப்பும் கரம் கோர்க்க வேண்­டிய தேவை­யி­ருப்­ப­தனை மீண்டும் வலி­யு­றுத்தி கூறி­யி­ருந்தேன்.  உங்கள் சமூ­கத்தின் முன்­னேற்றம் மற்றும் அமைதி ஆகி­ய­வற்­றுக்­கான உண்­மை­யான தெரி­வு­களை மேற்­கொள்ளும் நிலையில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் உங்கள் பெரும் முயற்­சிக்கு ஆத­ரவு வழங்கும் உண்­மை­யான பங்­க­ளா­ராக நண்­ப­ராக நீங்­களே இந்­தி­யாவை கண்­டு­கொள்­வீர்கள்.

சமூக நீதி­யா­னது சமூ­கங்­க­ளுக்கு  இடை­யி­லான முரண்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இவ்­வா­றான நிலையில் வெசாக் தினத்­துக்­கான தொனிப்­பொ­ரு­ளாக சமூக நீதி மற்றும் ஸ்திர­மான உலக சமா­தானம் என்­பது தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் ஸ்திர­மான உல­கத்தின் சமா­தானம் இரண்டு சேதங்­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­களில் அடிப்­ப­டை­யாக தங்­கி­யி­ருக்­க­வில்லை. சிந்­தனைஇ மன­நிலைஇ வெறுப்பு மற்றும் வன்­முறை போன்ற சிந்­த­னை­களில் ஊடு­ரு­வி­யி­ருக்கும் மறை பொருட்கள் ஆகி­ய­வற்­றில்தான் உலக சமா­தானம் தங்­கி­யுள்­ளது.

எமது பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தின் தோற்றத்தின் மூலம் இந்த கொடூரமான உணர்வின் பலமான பிரசாரத்தினை காணமுடியும். மிகவும் கவலை தரும் விடயமாக வெறுப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் பேச்சுக்களுக்கு அவர்கள் தயாராகியிருக்கவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. மாறாக அழிவையும் மரணத்தையும் ஏற்படுத்துவதற்காக அவை காணப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் பரவிக் காணப்படும் வன்முறையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்லது அதற்கு விடையளிப்பதற்கு  பௌத்தத்தின் செய்தியான சமாதானமே சிறந்த விடையாக இருக்குமென்று நான் நம்புகின்றேன். சமாதானத்தை விட சிறந்த உயர்பெறுமானம் ஒன்றினை காணமுடியாது. இவ்வாறான நிலையில்  இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்பட்டு சமாதானம், உபசரிப்பு, இணக்கம் மற்றும் எமது அரசாங்கங்களின் செயற்பாடுகள்  கொள்கைகள் ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக  புத்தரின் சிந்தனையை பின்பற்ற வேண்டிய தேவையுள்ளது என்றார்.