இன்றைய திகதியில் நாளாந்தம் கடுமையாக உழைத்து குறைந்த அளவில் வருவாய் ஈட்டும் மக்களின் பெருங் கனவு என்பது தங்களுடைய வங்கிக் கணக்கில் ஐந்து இலக்கம் அல்லது ஆறு இலக்கத்தில் ரொக்கம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதுதான். இது பேராசை என்றும் சிலர் குறிப்பிடலாம். ஆனால் ஆண்டவனின் அருள் இருந்தால் இது சாத்தியம் என்கிறார்கள் ஆன்மீக முன்னோர்கள்.
உடனே எம்மில் சிலர் இது எப்படி சாத்தியம்? இதன் பின்னணியில் ஏதாவது இருக்குமே..! அது என்ன? என்று சொல்லுங்கள் என்பர்.
இதற்கு தேவையான பொருட்கள் : சிறிதளவு ஆல மர விழுது, மஞ்சள் வண்ண நூல், பச்சரிசி, மூடியுடன் கூடிய ஒரு கோப்பை.
நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்பதனை தெரிந்து கொண்டு அந்த நட்சத்திரத்திற்கு பணம் அல்லது தனத்தை அளிக்கக்கூடிய நட்சத்திர தினத்தன்று மாலை ஐந்து மணிக்குள் உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் ஆல மரத்திற்கு செல்லுங்கள் அல்லது உங்களுக்கு அறிமுகமான இடத்தில் இருக்கும் ஆல மரத்திற்கு அருகே செல்லுங்கள்.
அங்கே ஆல மர விழுதுகள் இருக்கும். அதனை சிறிய அளவில் வெட்டி எடுத்து வாருங்கள். அதனை வெட்டுவதற்கு முன் 'சிவாயநம' அல்லது 'நாராயணநம' அல்லது 'சக்தி ஓம்' என நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்து விட்டு வெட்டுங்கள். அந்த சிறிய அளவிலான ஆல மர விழுதினை வீட்டிற்கு எடுத்து வந்து, அதனை நீரால் கழுவி உங்களிடம் உள்ள மஞ்சள் வண்ண நூலால் சுற்றுங்கள்.
அதன் பிறகு உங்களிடம் இருக்கும் முழுமையான பச்சரிசியை கவனமாக சேகரித்து ஒரு கோப்பைக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கோப்பைக்குள் நீங்கள் மஞ்சள் வண்ண நூலால் கட்டிய ஆல மர விழுதினை வைத்து விடுங்கள். அதன் பிறகு அதனை மூடி விடவும்.
அதன் பிறகு வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை என சொல்லப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அந்த ஆல மர விழுது உள்ள கோப்பையை உங்களது பூஜை அறையில் அல்லது உங்களுடைய பணப் பெட்டியில் வைத்து விட வேண்டும் .
அதன் போது 'எம்முடைய வங்கிக் கணக்கில் ஐந்து இலக்கம் அல்லது ஆறு இலக்கம் கொண்ட தன வரவு இருக்க வேண்டும். நீடிக்க வேண்டும் அதற்கு அருள் மழை பொழியுங்கள்' என்று மனதார பிரார்த்திக்க வேண்டும். இப்படி பிரார்த்தனையை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால் அதன் பிறகு வரும் 48 நாட்களுக்குள் உங்களுடைய தனவரவு இரட்டிப்பாவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM