ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'காதலிக்க நேரமில்லை' எனும் படத்தில் இடம்பெற்ற 'என்னை இழுக்குதடி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் 'ஒஸ்கர் நாயகன்' ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாடகி தீ இணைந்து தோன்றுவதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் 'காதலிக்க நேரமில்லை' எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி, ரோஹன் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கேவ்மிக் ஆரே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'என்னை இழுக்குதடி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை புயலின் வசீகரிக்கும் மேலத்தேய தாளகதியில் அமையப் பெற்றிருக்கும் இந்த பாடலில் ஏ.ஆர். ரஹ்மானும், பாடகி தீயும் இணைந்து தோன்றுவதால் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM