உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இரத்து செய்யும் சட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் - சுதந்திர கட்சி வலியுறுத்தல்!

23 Nov, 2024 | 09:15 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வதற்கான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்தலில் தனித்தே களமிறங்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் குழு கூட்டம்  வெள்ளிக்கிழமை (22)  இரவு கூடியது. இது தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதிமன்ற உத்தரவுக்கமைய வெகுவிரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பலர் கட்சி மாறியுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே அதே வேட்புமனுவின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது பொறுத்தமானதாக இருக்காது. எனவே தற்போதைய அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி பழைய வேட்புமனுவை இரத்து செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, புதிய வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டோம். அதற்கமைய எமது கட்சிக்கும் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம். இது தொடர்பில் அந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் எமக்கு அநாவசியமானவை. எனவே எமக்காக ஆசனம் எமக்கு வழங்கப்பட வேண்டும்.

அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் சுதந்திர கட்சியிலிருந்து யாரை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவது என்பதை தீர்மானிப்போம். அதேவேளை மக்களுக்கு பாரிய வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் அவற்றை நிறைவேற்ற வேண்டும். அதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22