மலேசிய பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் 11 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, ஜனவரி 4 , 5 ஆம் திகதிகளில் டேவான் ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெற உள்ளது.
அந்நிகழ்வை பினாங்கு மாநில முதல்வர் ஆரம்பித்து வைக்க, வீட்டு வசதித்துறை அமைச்சர் ட்த்தோ ஸ்ரீ சுந்தர்ராஜு தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் இந்திய அரசு சிறு குறு தொழில் அமைச்சகம், மலேசிய சிறுத்தொழில் அமைச்சகம், மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தகர்கள், வர்த்தக சங்கங்கள், வர்த்தக ஆணையங்கள், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நான்கு அமர்வுகளாக நடைபெறும் இந்நிகழ்வில் குளோபல் கனெக்ட் கான்ஃபரன்ஸ், பெண் தொழில் முனைவோர்க்கென தனி அமர்வு நடைபெற உள்ளது. அதில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கிராமங்களில் தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை உலகத் தமிழர்கள் பயன்படுத்தும் வகையிலும், சந்தைப்படுத்துவதிலும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு உதவியுடன் செயல்படும் சுமார் 30,000 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் 800 க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டறியப்பட்டுள்ளது. இப்பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்த தனி அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனமும், பினாங்கு இந்திய வர்த்தக சங்கமும், மலேசிய முஸ்லிம் வர்த்தக சங்கம், இதனுடன் பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இணைந்து செயல்பட உள்ளன.
இந்நிகழ்விற்கு தமிழக அமைச்சர்களுக்கும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள அமைச்சர் பெருமக்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என உலகத்தமிழ் வர்த்தக சங்கம் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் ஏற்பாட்டு குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM