இரு நபர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட மோதலின் விளை­வாக கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னவர் பலி­யா­கி­யுள்ளார். களுத்­துறை புளத்­சிங்­கள மோல்­காவ பகு­தி­யி­லேயே மேற்­படி சம்பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்துள்ளது.

புளத்­சிங்­கள பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட மோல்­காவ பகு­தியில் இரு நபர்களுக்கு இடையே ஏற்­பட்ட வாய்த்தர்க்கம் அடி­த­டி­யாக மாறி­யுள்­ளது. இதன் போது ஒரு­வ­ரினால் கடு­மை­யாக தாக்­கப்­பட்ட மற்­றைய நபர் அவ்விடத்­தி­லி­ருந்து தப்பிச் செல்ல முயற்­சித்­துள்ளார்.

இவ்­வாறு தப்பிச்செல்லும் நோக்கில் மேற்­படி நபர் அருகில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த லொறி­யொன்றின் மீது பாய்ந்­துள்ளார். குறித்த நபரை கடு­மை­யாக தாக்­கிய நபரும் குறித்த லொறியின் மீது தாவி தாக்­குதல் நடத்­தி­யுள்ளார்.

அதனால் குறித்த நபர் லொறி­யி­லி­ருந்து விழுந்­து கடு­மை­யான காயங்­க­ளுடன் ஹொரணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார் எனினும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

உயி­ரி­ழந்த நபர் 53 வய­து­டைய மோல்­காவ எட்டாம் மைல்கல் பகு­தியை சேர்ந்த தயா­னந்த என்­பது விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.  

இதன் போது லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.