திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட பிரார்த்தனை நிகழ்வு இன்று சனிக்கிழமை (23) குறிஞ்சாக்கேணி பாலமுன்றலில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை செயலாளர், உலமா சபை, சூறா சபை, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உலமாக்கள், மதரஸா மாணவர்கள் உட்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த படகுப் பாதை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய் உட்பட சுமார் 08 அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பறிபோயின.
இந்த குறிஞ்சாக்கேணி பாலம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாதுள்ளது.
இப்பாலத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் கடந்த கால அரசியல்வாதிகளால் நடப்பட்டது. எனினும், இப்பாலம் இதுவரை திருத்தப்படவில்லை.
இப்பாலத்தின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அரச அதிகாரிகள் என பலர் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே, இது தொடர்பில் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டார்.
மேலும், ஆளுங்கட்சியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இப்பாலத்தின் புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடக சந்திப்பொன்றையும் கடந்த காலத்தில் முன்வைத்திருந்தார்.
எனவே, அநுர குமார அரசாங்கத்தில் இதனை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM