இலங்கையிலுள்ள மாணவர்களின் உயர் கல்விக்காக IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனல் – அமெரிக்க வெப்சர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது தொர்பான கருத்தரங்கு நேற்று முன்தினம் BMICH இல் IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலைக் கல்வியை முடித்த இலங்கை மாணவர்களுக்கு அமெரிக்காவின் வெப்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அமெரிக்க வெப்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உதவித் துணைத் தலைவர் சம்ராத் ரே சௌதாரி, உதவி இயக்குனர் சியட் நபி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் இலங்கையிலுள்ள மாணவர்களும் நிறுவனங்களின் தலைவர்களும் இளைஞர் யுவதிகளும் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயில்வது தொடர்பில் உள்ள சந்தேகங்ளை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும் எனவும் அந்த பல்லைக்கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கருத்தரங்கில் IDM நேஷன் கெம்பஸின் இன்டர்நெஷனலின் பணிப்பாளர் அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணாண்டோ, முகாமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM