இந்­தியப் பிர­தமர்  நரேந்­தி­ர­ மோடி  எங்­களில் ஒருவர் அவர்  இலங்­கைக்கு  விஜயம் செய்­தமை  எமக்கு கிடைத்த பெரு­மை­யாகும் என்று புத்த சாசன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

கொழும்பில் நேற்று ஆரம்­ப­மான  சர்­வ­தேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

இந்த நிகழ்வில்  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி பிர­தம அதி­தி­யாக  கலந்­து­ கொண்­டி­ருந்தார்.  இங்கு  அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,  

இந்த நிகழ்வை இலங்­கையில் நடத்தக் கிடைத்­த­மை­யை­யிட்டு   மகிழ்ச்சி அடைகின்றோம். புத்­தரின் பிறப்பு, ஞான­ம­டைதல், மற்றும்   இறப்பு ஆகி­யன இடம்­பெற்ற  மிக­முக்­கிய தின­மாக  வெசாக் தினம் காணப்­ப­டு­கின்­றது.  

2030 ஆம் ஆண்டு நிலை­யான அபி­வி­ருத்தி தொடர்­பாக ஐ.நா. பேசி­வ­ரு­கி­றது. ஆனால் உலக  சமத்­துவம் மற்றும்  நிலை­யான அபி­வி­ருத்தி இல்­லாமல் இதனை அடைய முடி­யாது என்­பது முக்­கி­ய­மாகும்.  

இந்த வர­லாற்று  வெசாக் தின நிகழ்வு உல­கத்­திற்கு  ஒரு முக்­கி­ய­மான செய்­தியை கொண்டு செல்­கி­றது. புத்தர் நேபா­ளத்தில் பிறந்தார்.  இந்­தி­யாவில் ஞான­ம­டைந்தார்.  இலங்­கைக்கு மூன்று முறை வருகை தந்­துள்ளார். அவ்­வாறு பார்க்கும்  போது இந்த மூன்று  நாடு­களின் தலை­வர்­களும் இன்று இலங்­கையில் உள்­ளனர்.

இது ஒரு வர­லாற்று சிறப்­பு­வாய்ந்த நிகழ்­வாகும்.  இந்த நிகழ்­விற்கு  இந்­தியப் பிர­தமர் மோடி வருகை தந்­தமை பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும். 

இந்­தியப் பிரதமர் மோடி   இலங்கையர்களாகிய   எங்களில் ஒருவராவார்.  எனவே அவரின் வருகையில் நாங்கள் பெருமை அடை கிறோம் என்றார்.