தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன பரிகாரம்

22 Nov, 2024 | 06:06 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் பாடசாலைகளில் கல்வி கற்ற பிறகு உயர்கல்வியை தொடராமல் குடும்ப பாரத்தை சுமப்பதற்காக தயாராகி விடுகிறார்கள். இவர்கள் தங்களுக்குத் தெரிந்த சேவை துறையிலோ அல்லது தொழில்நுட்ப ரீதியிலான துறையிலோ குறைந்தபட்ச தகுதியை ஏற்படுத்திக் கொண்டு பணியாற்றத் தொடங்கி விடுகிறார்கள்.

இவர்கள் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதில்லை. கடின உழைப்பு -அயராத உழைப்பு -நேர்மையான உழைப்பு -திட்டமிட்ட நிதானமான வளர்ச்சி -ஆகியவற்றை இலக்காகக் கொண்டு பயணிக்க தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு புள்ளிக்கு பிறகு அதாவது குடும்ப உறுப்பினர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்படும் தருணங்களில் எல்லாம் மனதளவில் சங்கடம் அடைந்து வேறு பாதையில் பயணிக்கலாமா..! என எண்ணத் தொடங்குகிறார்கள்.

இவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. பலருக்கு தோல்வியே கிடைக்கிறது. இது தொடர்பாக ஆன்மீக முன்னோர்களிடம் ஆலோசனை கேட்டால்... அவர்கள் இந்த பிறவியில் நீங்கள் வாங்கி வந்த வரத்தின் அளவு அவ்வளவுதான் என்று எளிதாக புரியும்படி சொல்லி விடுகிறார்கள்.

அதாவது நீங்கள் உங்களுடைய முன்னோர்களின் கர்ம பலன் காரணமாக இந்த பிறவியில் பொருளாதார ரீதியில் முன்னேற முடியாமல் தவிக்கிறீர்கள் என விளங்க வைத்து விடுகிறார்கள். ஆனால் அதே தருணத்தில் இதிலிருந்து விடுபடவும் ஆன்மீக முன்னோர்கள் உபாயத்தை அருளியிருக்கிறார்கள்.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் மந்திரத்தை உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் பழமை வாய்ந்த சிவாலயத்தில் வியாழக்கிழமைகளில் அல்லது திங்கட்கிழமைகளில் காலையில் சென்று சிவபெருமான் சன்னதிக்கு முன் அமர்ந்து ,24 நிமிடங்கள் சிவனை தியானித்து, அதன் பிறகு இந்த மந்திரத்தை ஒருமுறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரத்தை உச்சரித்த பிறகு மீண்டும் 24 நிமிடங்கள் சிவனை தியானித்து,' கர்ம பலன் நீங்கி சுப பலன் கிடைக்க வேண்டும்' என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய மந்திர உச்சாடன பரிகாரத்தை ஒருமுறை மேற்கொண்டாலே பலன் உண்டு. தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால்... உங்களுடைய ஏழு தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் செய்த பாவங்கள் மற்றும் கொடுஞ்செயல்கள் அனைத்தும் விலகி, நீங்கள் இந்த பிறவியில் பெற வேண்டிய சுப பலன்களை உடனடியாகவும், விரைவாகவும் பெறலாம்.

அந்த வலிமையான மற்றும் எளிமையான மந்திரம் இதுதான்...

''ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ!

ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வராய நமஹ!

ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ!

ஓம் ஸ்ரீ ஓம்காரம் மலேஸ்வராய நமஹ!

ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ!

ஓம் ஸ்ரீ ராமேஸ்வராய நமஹ!

ஓம் நாகேஸ்வராய நமஹ!

ஓம் விஸ்வேஸ்வராய நமஹ!

ஓம் திரியம்பகேஸ்வராய நமஹ!

ஓம் கேதாரீஸ்வராய நமஹ!

ஓம் குஸ்ருணேஸ்வராய நமஹ! ''

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமானுஷ்யமான பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் சூட்சம...

2025-02-15 18:39:40
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36