ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டை நவம்பர் 24-25 திகதிகளில் நடாத்த சவூதி தீர்மானம்

Published By: Digital Desk 7

22 Nov, 2024 | 06:07 PM
image

எழுத்து- காலித் ரிஸ்வான்

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிப்பதற்கான சவூதியின்  நிகழ்ச்சித் திட்டத்தின் 30ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) நவம்பர் 24-25 திகதிகளில், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களின் அனுசரணையில், ஒரு சர்வதேச மாநாட்டை நடாத்த தீர்மானித்துள்ளது.

இரு நாட்கள் தொடர்தேர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், தேசிய காவல் துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், சுகாதாரம், கல்வி, மற்றும் ஊடக அமைச்சுகள் போன்ற சவூதி அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகளாவிய மனிதாபிமான மற்றும் மருத்துவ அமைப்புகள், நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் அமைப்புகள் உட்பட சவூதி அரேபியாவில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இம் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் மாநாட்டில் மனிதாபிமானம் தொடர்பான மற்றும் அறிவியல் அமர்வுகள், கண்காட்சிகள், மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் மனிதாபிமான மற்றும் மருத்துவ சேவைகளில் சவூதி அரேபியா அடைந்துள்ள முன்னணி நிலை எடுத்துக்காட்டப்படும்.

இந்த முயற்சி சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்துக்கான நோக்கங்களுடன் தொடர்புடையதாகவும், நாட்டின் சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது.

இந்த நிகழ்வின் போது, குழந்தைகள் நலனை முதன்மைப்படுத்தி இயங்குகின்ற உலகளாவிய பிரபல அமைப்புகளுடனும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவில், முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்தாக உள்ளன. இது சவூதி அரேபியாவின்,

குறிப்பாக குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்களை ஆதரிக்கும் ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது. அத்தோடு இதே மாநாட்டில் மருத்துவ மற்றும் மனிதாபிமான துறையில் முக்கிய பரிந்துரைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிந்துரைகள், இரட்டை குழந்தைகள் பிரிப்பு மற்றும் மனிதாபிமான சேவைகள் குறித்து ஆர்வம் உள்ள நிபுணர்களுக்கு முக்கியமான ஆதாரமாக அமையும்.

இம் மாநாட்டில் பதிவுசெய்ய மற்றும் மேலும் தகவல் அறிய: https://icct.ksrelief.org/. என்ற லிங்க் இனை உபயோகிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டுக்கு மலேசிய...

2024-12-08 16:54:59
news-image

புளியம்பொக்கணை கிராம மக்களுக்கு சைவ மங்கையர்...

2024-12-07 19:18:51
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர்...

2024-12-07 01:31:17
news-image

கவிஞர் க.பே.முத்தையாவின் நினைவுப் பேருரையும் “தமிழ்...

2024-12-06 17:38:54
news-image

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி...

2024-12-06 13:37:29
news-image

ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத...

2024-12-06 09:30:52
news-image

இலங்கையில் சீன உணவு திருவிழா

2024-12-06 06:59:44
news-image

இலங்கை சோனக பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

2024-12-05 18:09:25
news-image

ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20ஆவது...

2024-12-05 18:01:16
news-image

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 145வது நினைவு தினம்...

2024-12-05 13:45:23
news-image

ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில் 750க்கும்...

2024-12-04 17:08:55
news-image

விசாக்கா பட்டம் விடும் திருவிழா !

2024-12-02 19:43:15