(எம்.மனோசித்ரா)
இனவாத அரசியலுக்கு இனி இடமளிக்கப் போவதில்லை என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1971இல் மாகாணசபை முறைமையூடாக வடக்கு , கிழக்கிற்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எதிர்ப்பினை வெளியிட்டது. எவ்வாறிருப்பினும் 53 ஆண்டுகளின் பின்னர் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு இனவாத அரசியலுக்கு இடமில்லை என நிலைப்பாடுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு வங்குரோத்தடைந்தமைக்கு ஜே.வி.பி.யும் பொறுப்பு கூற வேண்டும். தற்போது கொள்ளைகளை மாற்றிக் கொண்டு வேறு திசையில் பயணிக்கின்றனர். எவ்வாறிருப்பினும் பல ஆண்டுகளின் பின்னராவது இவர்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டமை மகிழ்ச்சிக்குரியது.
ஆனாலும் தற்போதைய ஜனாதிபதியிடம் புதிய வேலைத்திட்டங்களை நாம் பார்க்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துச் செல்கின்றனர். 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாக முன்னர் கூறிய விடயங்களுக்கு தற்போது 6 மாதங்கள் கேட்கின்றார். அது சரியா?
ஒரு அரிசியைக் கூட இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனக் கூறியவர்கள் தற்போது, முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். மக்களை பசியால் வாட விடக் கூடாது என்பதற்காக அரிசியை இறக்குமதி செய்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தேர்தலின் போது வாக்குறுதிகளை வழங்க முன்னர் அவர்கள் இந்த யதார்த்தத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
ஏப்ரலில் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் அல்லது ஜனவரியில் அதனை சமர்ப்பிக்க முடியுமல்லவா? அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வழங்கிய வாக்குறுதிகள், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்கள் எப்போது வழங்கப்படும்?
இனவாத அரசியலுக்கு இனி இடமளிக்கப் போவதில்லை என்று கூறுகின்றனர். 1948ஆம் ஆண்டு அனைத்து இலங்கையர்களும் இணைந்து தான் சுதந்திரத்தைப் பெற்றனர். 1971ஆம் ஆண்டு தான் இனவாத பிரச்சினை தோற்றம் பெற்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மலைநாட்டுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு மாகாணசபை தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்திய போது ஜே.வி.பி. அதனை எதிர்த்தது.
அன்று வடக்கிற்கும் தெற்கிற்கும் அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்த போது மக்களை கொல்ல ஆரம்பித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6000 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் அரசியலை இவர்களை சீரழித்தனர்.
இவ்வாறானவர்கள் இன்று இனவாதம் அற்ற நாடு பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் எமது கட்சியின் கொள்கை என்றும் இதுவாகவே காணப்பட்டது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையையே நாம் காலம் காலமான வலியுறுத்தி வருகின்றோம். 53 ஆண்டுகளின் பின்னர் ஜே.வி.பி. இதை உணர்ந்து கொண்டுள்ளமை சிறந்த விடயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM