இரு வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் இருவர் கைது !

Published By: Digital Desk 2

22 Nov, 2024 | 12:50 PM
image

அத்துருகிரிய மற்றும் பேலியகொடை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபரகட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 08 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரமடுவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய மற்றும் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த தெனியாயா பாடசாலைகள்,...

2026-05-12 00:00:23
news-image

ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் அச்சுறுத்தல்களுக்கு...

2026-05-11 14:18:02
news-image

வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் அரசாங்கம்...

2026-05-11 14:40:31
news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11