காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு (படங்கள்)

Published By: Ponmalar

12 May, 2017 | 04:06 PM
image

காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துவந்த  பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

குறித்த ஹெரோயினை கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது 100 வீதம் ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் சுமார்  9 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கொழும்பிற்கு எடுத்து செல்வதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என  கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடற்படையினரை கண்டதும் கடலில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20