இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இச் சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ் தானிகர் தரண்ஜித் சிங் சத்துவும் கலந்துகொண்டிருந்தார். 

இச் சந்திப்பு டிக்கோயா மைதானத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை நிறைவுசெய்துவிட்டு மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர், நோர்வூட் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உரையாற்றிய மோடி,  மலையக மக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு சில உறுதிமொழிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிபேச்சுவார்ததை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.