உலகில் மிக உயரமான - குள்ளமான இரு பெண்கள் : முதல் சந்திப்பு 

Published By: Nanthini

21 Nov, 2024 | 04:51 PM
image

கின்னஸ் உலக சாதனை தினம் இன்று வியாழக்கிழமை (21) உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடும் விதமாக அரியதொரு காட்சியை உலக மக்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள், ருமேசா கெல்கியும் ஜோதி அம்கேயும். 

ருமேசா கெல்கி (Rumeysa Gelgi) உலகின் மிகவும் உயரமான பெண். ஜோதி அம்கே (Jyoti Amge) உலகில் மிக குள்ளமான பெண். 

இந்தியா நாட்டைச் சேர்ந்த  ஜோதி அம்கேயும் துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேசா கெல்கியும் லண்டனில் செவ்வாய்க்கிழமை (19) முதல் முதலாக சந்தித்துக்கொண்டனர். 

உயரமும் குள்ளமுமான இந்த இரண்டு பெண்களும் அன்று பகல் தேநீர் அருந்திக்கொண்டே மனம் விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டனர். 

இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்தது. 

ருமேசா கெல்கி 215.16 செ.மீ (7 அடி 7 அங்குலம்)உயரமுடைய உலகில் மிக உயர்ந்த பெண்ணாகவும், ஜோதி அம்கே 62.8 செ.மீ (2 அடி 7 அங்குலம்) உயரமுடைய உலகில் மிக குள்ளமான பெண்ணாகவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்