மஹியங்கனை - தொடாம்வத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 64 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.