யாழ்ப்பாணம், புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் முதல் ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான குற்றப்பகிர்வு பத்திர வழக்கு ஏடுகள் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையானது கொழும்புக்கு மாற்றப்படுவது தொடர்பான முயற்சிகள் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரத்தை இரும்பு பெட்கத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ்.மேல் நீதிமன்றமானது நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கானது கடந்த திங்கட்கிழமையே சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு தபாலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.