மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி. ஒருவர் படுகாயம்

Published By: Vishnu

20 Nov, 2024 | 08:33 PM
image

மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள்  இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று புதன்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம்  பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் , மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்  வேகக்கட்டுப்பாட்டை  இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம்  ஐந்தாவது மைல் கல் பகுதியில்  மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவத்தில்  மாங்குள பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் (20 வயது), ஜெயகுமார் விதுசன்( 23வயது ) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். மரியதாஸ் சுவாமிகீர்த்தி (31 வயது) எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்  மாங்குளம் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-17 10:25:49
news-image

குருணாகலில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு!

2025-01-17 10:17:09
news-image

இரத்மலானையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-01-17 10:05:38
news-image

ஜனவரி 21 முதல் 24 வரை...

2025-01-17 10:23:11
news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30