நாடு பூராகவும் இலைமறைகாய்களாக உள்ள இளம் நாடகக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய இளைஞர் நாடக விழா இம்முறை 43வது முறையாகவும் நடாத்தப்படவுள்ளது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்படும் இவ்விழாவானது இம்முறை இரு பிரிவுகளாக இரண்டு காலகட்டங்களில் நடாத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
அதன் அடிப்படையில் நெடுநாடகங்கள் நவம்பர் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மருதானை டவர் அரங்கிலும் குறு நாடகங்கள் டிசம்பர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரைலும் பினி அரங்கிலும் பிற்பகல் 6.00 மணிக்கு மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்நாடகப் போட்டியின் முதலாவது சுற்றுக்காக நாடு பூராவும் இருக்கும் 15-35 வயது வரையான இளம் கலைஞர்களினால் அனுப்பப்பட்ட நாடகப் பிரதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சிறந்த பிரதிகளைக் கொண்ட நாடகங்கள் இரண்டாம் சுற்றுக்காக மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் மேடையேற்றப்பட்டதுடன் அவற்றில் சிறந்த நாடகப் பண்புகளைக் கொண்ட நாடகங்கள் இந்நாடக விழாவின்போது மேடையேற்றப்படவுள்ளன.
மொத்தமாக 6 நெடுநாடகங்களும் 24 குறு நாடகங்களும் இறுதிச்சுற்றுக்காக மேடையேற்றப்படவுள்ளதுடன் நவம்பர் மாதம் 25ஆம் திகதி குமாரவேலு யசோத்குமாரின் ‘சந்தர்ப்பம்’ மற்றும் 27ஆம் திகதி பரமநாதன் நிஷாந்தனின் ‘ஊசி’ஆகிய இரு நெடுநாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
அத்துடன் டிசம்பர் 26ஆம் திகதியிலிருந்து லும்பினி அரங்கில் ஆரம்பமாகும் குறு நாடகப் போட்டிக்காக பாத்திமா இஷாராவின் ‘வீரனின் மனைவி’, பாஸ்கர் கிருஷானின் ‘மடையர்’, கிருஷ்ணன் ஹமீஷா தேவியின் ‘மாங்கல்யம்’, அகிலேஸ்வரன் கிருஸ்ணராஜின் ‘இளவந்திகை’, இராமச்சந்திரன் திருக்குமரனின் ‘மறுதழிப்பு’, இராமலிங்கம் ஸ்ரீகாந்தின் ‘மயிர்கடவுள்’ ஆகிய நாடகங்கள் முறையே 26ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை மேடையேற்றப்படவுள்ளன.
அத்துடன் 43 தேசிய இளைஞர் நாடக விழாவின் போது போட்டிக்காக மேடையேற்றப்படும் இந்நாடகங்கள் அனைத்தையும் கண்டு இரசிப்பதற்கான அனுமதியை இலவசமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM