எம்மில் பலரும் தன வரவிற்காக ஆன்மீக முன்னோர்கள்- ஜோதிட நிபுணர்கள் - அனுபவம் மிக்கவர்கள் - சொல்லும் அனைத்து சூட்சம குறிப்புகளையும் தவறாது பயன்படுத்தி தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதில் தான் தீவிர கவனமும், முழு அக்கறையும் காட்டுவார்கள். இந்தத் தருணத்தில் தன வரவு அதிகரிப்பதற்காக சோதிட முறைகளில் சூட்சமமான பலன்களை தொடர்ந்து வழங்குவதில் எண் கணித சோதிட முறைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.
இன்றைய சூழலில் நாம் அனைவரும் பெயர்களை விட எண்களாலேயே அதிகமாக அறியப்படுகிறோம்.
எண்கள் எம்முடைய வாழ்வை சிறப்பானதாகவும், உன்னதமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளும் சூட்சுமத்தையும் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரட்டை இலக்க எண்கள் அதிக பலன்களை ... தன வரவு தொடர்பான பலன்களை வழங்குவதாக சோதிட துறை ஆய்வாளர்கள் குறிப்பாக எண் கணித சோதிட ஆய்வாளர்கள் பல வகையான ஆதாரங்களுடன் விவரிக்கிறார்கள்.
ஏன் இரட்டை இலக்கம்? என்பதற்கும் அவர்களிடத்தில் சூட்சமமான விளக்கம் இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் முன்மொழிந்த நாம் பிறந்த நட்சத்திரத்திற்குரிய எண்களை அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்தினால் பண வரவு தடையின்றி கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
இந்த நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் 27 நட்சத்திரக்காரர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிரத்யேக இரட்டை இலக்க எண்களை வழங்கி இருக்கிறார்கள். இந்த எண்களை நீங்கள் தெரிந்து கொண்டு அதனை தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினால் தனவரவு அதிகரிக்கும்.
எம்முடைய வங்கி எண் - கைபேசி எண்- வீட்டு இலக்க எண் - ஆகியவற்றில் இந்த எண்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இதனை மாற்ற இயலாது என்பவர்கள் உங்களது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட எண்களை மூன்றிலக்கமாகவோ அல்லது நான்கு இலக்கமாகவோ மாற்றி அதாவது உதாரணத்திற்கு அஸ்வினி நட்சத்திரத்தின் தன வரவு தொடர்பான அதிர்ஷ்டத்திற்குரிய சூட்சம எண் 42 என இருந்தால்... உங்களது வங்கி கணக்கில் 420 ரூபாயை அல்லது நான்காயிரத்து இருநூறு ரூபாயையோ.. வங்கியின் இருப்பின் இருப்பது போல் தொடர்ச்சியாக பராமரித்து வந்தால்... தன வரவு அதிகரிக்கும்.
மேலும் வெள்ளி நாணயத்தை வாங்கி அதில் உங்களுடைய நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்டம் தரக்கூடிய சூட்சம எண்ணை பொறித்து, அதனை நாளாந்தம் பார்வையிட்டு, மனதில் தன வரவு தடையின்றி வரவேண்டும் என பிரார்த்தித்தால் தனவரவு தடையின்றி வருவதை அனுபவத்தில் காணலாம்.
இனி 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் சூட்சம எண்களை காண்போம்.
உங்களது ஜென்ம நட்சத்திரம்:
அஸ்வினி - 42
பரணி - 73
கிருத்திகை - 99
ரோஹிணி - 92
மிருகசீரிஷம் - 95
திருவாதிரை - 72
புனர்பூசம் - 99
பூசம் - 51
ஆயில்யம் - 68
மகம் - 12
பூரம் - 88
உத்திரம் - 79
ஹஸ்தம் - 74
சித்திரை - 32
சுவாதி - 51
விசாகம் - 22
அனுசம் - 54
கேட்டை- 64
மூலம் - 42
பூராடம் - 72
உத்திராடம் - 45
திருவோணம் - 41
அவிட்டம் - 68
சதயம் - 88
பூரட்டாதி - 79
உத்திரட்டாதி - 92
ரேவதி - 32
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரட்டை இலக்க அதிர்ஷ்ட எண்களை பயன்படுத்தி தன வரவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
உடனே எம்மில் சிலர் லொத்தரில் இதனை பாவிக்கலாமா..? என கேள்வி எழுப்பவர். அது உங்களது விருப்பம். வேறு சிலர் எம்முடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய எண்களை விட தன வரவை அள்ளித்தரும் இரண்டாம் நட்சத்திரத்திற்குரிய எண்ணை பயன்படுத்தலாமா? என கேட்பர். அதுவும் உங்கள் விருப்பம். இதனால் பலன் அடைந்தால் அது உங்களை மட்டுமே சேரும்.
பொதுவாக ஒவ்வொரு இரட்டை இலக்க எண்களுக்கும் சூட்சமமான ஆற்றல் உண்டு என்பது மட்டும்தான் உண்மை.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM