முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு  கூடிய மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன், பா.கஜதீபன்  மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் முள்ளிவாய்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காகவும், செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 600ற்கும் மேற்பட்ட மக்களுக்காகவும் தீபம் ஏற்றி நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை ஆரம்பித்துள்ளனர்.