புத்தளம் - மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது,
மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை ஏக்கரில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்று பாதுகாப்பு வேலி அமைத்துள்ளார்.
இந்த விவசாயச் செய்கையை சாப்பிடுவதற்காக காட்டு யானைக் கூட்டம் ஒன்று நேற்று இரவு அக்காணியினுள் புகுந்து பயிர் செய்கையை நாசம் செய்து விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் காட்டு யானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்துள்ள காட்டு யானை சுமார் 6 அடியைக் கொண்டதும் 20 முதல் 25 வயது மதிக்கதக்கது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்துள்ள யானையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்.
இக்காணியின் உரிமையாளரை கைது செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளவும் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM