மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : மந்தமான வாக்குப்பதிவு

20 Nov, 2024 | 05:00 PM
image

இந்தியாவின் வணிக முகமாக திகழும்  மும்பையை தலைநகராகக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் இன்று புதன்கிழமை (18)  நடைபெறுகிறது. 

மதியம் ஒரு மணி வரை மிக மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

288 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு ஆறு மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும்  52, 789 இடங்களில் 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு 9. 7 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தகுதி பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் 4.97 கோடி வாக்காளர்கள் ஆண்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் இருக்கிறார்கள். மதியம் ஒரு மணி வரை 32 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது. 

மிகக்குறைவாக மும்பை மாநகர் பகுதியில் 27 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், கட்சிரோலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மேலும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள், பொலிவுட் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 81 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு முதல் கட்ட தேர்தல் நிறைவடைந்தது. 

மீதமுள்ள 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. பகல் ஒரு மணி வரை இங்கு மொத்தம் 47 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நவம்பர் 23 ஆம் திகதியன்று நடைபெறுகிறது. அன்று மாலை முதல் முடிவுகள் தெரிய வரும்.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு மிக குறைவாக இருப்பதால் அரசியல் கட்சிகள் கலக்கமடைந்திருக்கின்றன என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24