புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் 'அரச இலக்கிய விருது வழங்கல் விழா -2024’ நிகழ்வு இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இவ்விருது வழங்கல் நிகழ்வு இம்மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு அலரி மாளிகையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவியின் அழைப்பின் பிரகாரம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மற்றும் இலங்கை இலக்கியத்துறைக்கு தமது உன்னத படைப்புகளால் ஊட்டமளித்த எழுத்தாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.
இதன்போது, இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கு ஆற்றிய உன்னத சேவை நிமித்தம் 2024ஆம் ஆண்டுக்கான `சாகித்தியரத்னா’ எனும் தேசத்தின் உயர் அரச விருதானது தமிழ் மொழியில் பிரபல இலக்கிய படைப்பாளி அன்னலட்சுமி இராஜதுரைக்கு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, சிங்கள மொழிக்கான 'சாகித்தியரத்னா' விருதினை தகைசார் பேராசிரியர் ஜினதாச தனன்சூரியவும், ஆங்கில மொழிக்கான 'சாகித்தியரத்னா' விருதினை பேராசிரியர் வோல்டர் பெரேராவும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் 2023ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த சுய நாவல், சுய சிறுகதை, சுய கவிதைப் படைப்பு, சுய இளையோர் இலக்கிய படைப்பு, சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடகம், சுய அறிவியல் புனைகதை, சிறுவர் இலக்கிய படைப்பு, சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு, நானாவித விடய நூல்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு, மொழிபெயர்ப்பு கவிதை படைப்பு, மொழிபெயர்ப்பு நாடகம், மொழிபெயர்ப்பு புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM