மாத்தறை - பாதேகம பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கெலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த பகுதியில் இடம்பெற்ற தான நிகழ்விற்கு உதவியாக இருந்த போதே இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஆயதங்களுடன் வந்த குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், பாதேகம பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.