கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் 35 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கடந்த 18 ஆம் திகதி அன்று ஏழரை கோடி ரூபா பெறுமதியான பணத்தை நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனமொன்றில் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது வாகனத்தின் சாரதியாகக் கடமையாற்றிய நபரொருவர், ஊழியர்கள் வாகனத்திலிருந்து வெளியே இறங்கிய வேளையில் பணத்தை எடுத்துக் கொண்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றிருந்திருந்தார்.
பின்னர், இந்த வாகனம் கம்பஹா, உக்கல்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான சாரதி கம்பஹா, கடுவன்கஹ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாக கூறப்படும் 31,515,291 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM