தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உட்பட நால்வரையும் எதிர்வரும் காலத்தில் நீதிவான் நிதிமன்றுக்கு அழைத்துவர தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதனால் மேல் நீதிமன்ற வழக்கின் போதே அவர்களை அழைத்துவரும் படி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4  பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.