இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா

Published By: Vishnu

20 Nov, 2024 | 12:56 AM
image

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார்.

இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் 3 தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்ய இருந்தனர். 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர். 

ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

இது குறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகவும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தபோதிலும், பிரிவது என முடிவு செய்துள்ளனர். 

மன கசப்புக்கள் மற்றும் பல சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'சுயம்பு...

2026-02-12 14:32:41
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35
news-image

ரீ ரிலீஸாகும் டி. ராஜேந்தரின் 'உயிருள்ள...

2026-02-07 15:00:47